உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட பாடகி பி.சுசீலா.. மருத்துவர்கள் ரிப்போர்ட் சொல்வது என்ன?
சென்னை: தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாடகிகளில் ஒருவர் பி. சுசீலா. சென்னையில் வசித்து வரும் பாடகி பி சுசீலா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது உடல் நிலை குறித்து தெரிவித்துள்ளனர். 88 வயதான பி.சுசீலாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் என்ன கூறினார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமா பாடல்களையும் பாடகர்களையும் தொகுத்து ஒரு புத்தகம் எழுதினால் அதில், பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு என பெரும் அத்யாயத்தை எழுத வேண்டும். அந்த அளவிற்கு தமிழ் சினிமா பின்னணி பாடல்களில் அரியாசணம் அமைத்து அமர்ந்தவர் பி.சுசிலா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல், கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட 9 வகையான மொழிகளில் பாடல்களை பாடி தனது திறமையை உலகறியச் செய்தவர். 9 மொழிகளில் மொத்தம் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இதில் 4 ஆயிரம் பாடல்களை தமிழ் மொழியில் பாடியுள்ளார். பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியதால் சுசீலாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

பத்ம பூஷன் விருது: தென்னிந்திய சினிமாவின் மெல்லிசை அரசி என சுசீலா அழைக்கப்படும் அளவிற்கு திறமை படைத்தவராக இருந்தார். தனது திறமையால் பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக இந்தியா துணைக் கண்டத்திலேயே, அதிக பாடல்களை பாடிய பாடகி இவர்தான். இந்த பெருமை மிகுந்த சாதனை உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் இடம் பெற்றுள்ளது. உலகசாதனை படைத்த பாடகி சுசீலா ஐந்து முறை மிகச்சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை வென்றுள்ளார். அதேபோல் கலைத்துறையில் சிறப்பான தொண்டாற்றியதாக சுசீலாவுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
முடி காணிக்கை: கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை செலுத்தினார் பாடகி பி.சுசீலா. அப்போது நாராயண மந்திரம் என்ற பக்தி பாடல் பாடி திருப்பதி ஏழுமலையானை வணங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் இவர் முடி காணிக்கை செய்த புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

மருத்துவர்கள் ரிப்போர்ட்: வயிற்று வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் தரப்பில் இருந்து பாடகி பி.சுசீலா மிகவும் நலமாக இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











