Ajithkumar: விஷாலை விட அஜித்குமாரைப் பார்த்தால்தான் பாவமாக உள்ளது.. சுசித்ரா என்ன இப்படி சொல்றாங்க!

சென்னை: இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து அஜித்குமார்தான் ஹாட் ஆஃப் த டாப்பிகளில் அதிகம் உள்ளார். விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறியது. அதன் பின்னர் அஜித் கார் ரேஸில் கலந்து கொள்ள தீவிர பயிற்சி எடுத்தது, பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து, குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு, அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள் கொண்டாட்டம், கார் ரேஸில் R பிரிவில் மூன்றாவது இடம் வென்றது. தற்போது விடாமுயற்சி டிரைலர் ரிலீஸ், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு என அஜித்குமார்தான் கடந்த இரண்டு வாரங்களில் இணையத்தில் அதிகம் டிரெண்டாகியுள்ளார். இப்படியான நிலையில் அஜித்தைப் பார்த்து பாவமாக உள்ளாதாக சுசித்ரா தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.வாக இருந்து பின்னணி பாடகியாக மாறியவர் சுசித்ரா. இவர் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை தனது யூடியூப் தளத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வீடியோவாக பதிவிட்டு வருகின்றார். குறிப்பாக, சினிமா உலகில் எதாவது பரபரப்பான சம்பவம் நடைபெறும்போது, அது குறித்து தனக்குத் தெரிந்த விஷயங்கள் குறித்தும், பிரபலங்கள் குறித்து தனது கருத்துக்களயும் தெரிவித்து வருகின்றார். இவரின் கருத்து பல நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நேரங்களில் அவரது கருத்து இணையவாசிகள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வகையில் இவர் நடிகர் அஜித் மற்றும் அவரது ரேஸ் பங்கேற்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் லைவில் பேசியது அஜித்குமார் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

rj suchitra ajithkumar racing ajithkumar

அஜித்குமாருக்கு பொதுவாகவே கார் ரேஸ் மீது அதீத ஆர்வம் எப்போதும் உள்ளது. சினிமாவினை தனது தொழிலாக கொண்டுள்ள அஜித், கார் ரேஸினை தனது ஹாபியாகக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும்போது, நடிகர் அஜித் இந்த ஆண்டில் தனது பெயரில் ஒரு அணியை உருவாக்கி, களமிறங்கியுள்ளார். துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் இவரது அணி R பிரிவில் மூன்றாவது இடம் வென்றது. இதனால் இவருக்கு வாழ்த்துகள் ஏராளமாகக் குவிந்தது.

உடல் நிலை: அஜித்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஏராளமாக குவிந்து வரும் நிலையில் பிண்ணனிப் பாடகி சுசித்ரா நேற்று, அதாவது ஜனவரி 16ஆம் தேதி, தனது இன்ஸ்டாகிராம் லைவில் அஜித்குமாரின் கார் ரேஸ் பங்கேற்பு குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார். அதாவது, “ அஜித்குமாருக்கு வயசான காலத்தில் இது எல்லாம் தேவையா? சினிமாவில் நடனம் ஆட முடியவில்லை, சண்டைக் காட்சிகளில் சரியாக நடிக்க முடியவில்லை. இப்படி இருக்கும்போது, உடல் வலிமை கொண்ட நபர்கள் பங்கேற்கும் கார் ரேஸில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? பேசும்போதே மூச்சு வாங்கிக் கொண்டு பேசுகின்றார்.

rj suchitra ajithkumar racing ajithkumar

ஆபத்து: அஜித் போன்ற நபர், ஏன் அதிகப்படியான பணத்தைக் கொண்டுபோய், கார் ரேஸில் கொட்டவேண்டும்? அந்தப் பணத்தை தமிழ்நாட்டில் ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்யலாமே? தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த கார் ரேஸின் ஆபத்தினை உணர்ந்து, அவற்றை தடை செய்துவிட்டார்கள். அப்படியான விளையாட்டில் அஜித் இந்த வயதில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்?

பாவம்: இப்போது எனக்கு விஷாலைப் பார்த்தால் பாவமாக இல்லை, அஜித்குமாரைப் பார்த்தால்தான் பாவமாக உள்ளது. எல்லாம் பணம் செய்யும் வேலை, ஷாரூக்கான் எப்படி தன்னிடம் இருக்கும் பணத்தை கிரிக்கெட்டில் கொண்டுபோய் கொட்டுகின்றாரோ, அதேபோல், அஜித் தன்னிடம் இருக்கும் கோடிகளைக் கொண்டுபோய் கார் ரேஸில் கொட்டுகின்றார்" என பேசியுள்ளார். இவரது பேச்சு அஜித் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. இதனால் சுசித்ராவை, அஜித் ரசிகர்கள் இணையத்தில் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

rj suchitra ajithkumar racing ajithkumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X