ஆண் குழந்தைக்கு அம்மாவானார் பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல்.. குவியும் வாழ்த்து!
சென்னை: பிரபல பாடகியான ஷ்ரேயா கோஷல் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல். தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
அவரது குரலில் வெளியான ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. மேற்குவங்கத்தை பூர்விகமாக கொண்ட ஷ்ரேயா கோஷல் பல மொழிகளில் பாடி வருகிறார்.

ஏராளமான விருதுகள்
இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, வங்காளம் என நாட்டின் பெரும்பாலான மொழிகளில் பாடிவிட்டார். மேலும் தேசிய விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகள் என வாங்கி குவித்துள்ளார்.

காதலருடன் திருமணம்
ஷ்ரேயா கோஷலின் மயக்கும் குரலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.

அழகிய புகைப்படம்
திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல். கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் ஷ்ரேயா கோஷல்.

ஆண் குழந்தையை பெற்றார்
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷ்ரேயா கோஷல் இன்று அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனை ஷ்ரேயா கோஷல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
அதில் கடவுள் இன்று பிற்பகல் ஒரு விலைமதிப்பற்ற ஆண் குழந்தையை எங்களுக்கு ஆசீர்வதித்தார். இது முன்பு உணராத ஒரு உணர்ச்சி. ஷிலாதித்யாவும் நானும் எங்கள் குடும்பங்களுடன் முற்றிலும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் சிறிய பண்டில் மகிழ்ச்சிக்கு உங்கள் எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











