ஃபுல் போதை.. ஒரே ரூமில் தனுஷும், கார்த்திக்கும் என்ன செய்தார்கள் தெரியுமா?.. பகீர் கிளப்பிய சுசித்ரா
சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அவர் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்திருந்தார். இப்போது இரண்டு பேரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் தனுஷ் குறித்து பின்னணி பாடகி சுசித்ரா பேசியிருக்கும் விஷயம் பகீர் கிளப்பியிருக்கிறது.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் கோயில் நுழைவு போராட்டத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வையும், வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ரேஸில் பந்தயம் அடித்தது.

தனுஷ் அப்செட்: தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோவிடமே தோற்றுவிட்டோமே என்று தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்ததாக அவர் தனது 50ஆவது படத்தில் நடித்திருக்கிறார். அதனை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது அடுத்த மாதம் ரிலீஸாகிறது.
அடுத்த படம்: ராயன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். ஏற்கனவே வாத்தி படத்தில் நடித்து கையில் சூடுபோட்டுக்கொண்ட அவர் மீண்டும் ஏன் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டனர். ஆனால் வாத்தி படத்தில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்து தெலுங்கில் தனக்கென தனி மார்க்கெட்டை நிலைநாட்டும் நோக்கத்தில் அவர் இருக்கிறார் என திரைத்துறையில் பேச்சு ஓடுகிறது.
குபேரா: படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தாடியும், தம்பட்டையுமாக பிச்சைக்காரர் போல் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் கெட்டப்பே வேற மாதிரி இருக்கிறதே. அப்போ கதை எப்படி இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தனர். இதற்கிடையே தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்திருந்தார் தனுஷ்.
சுசி லீக்ஸ்: இதற்கிடையே பின்னணி பாடகி சில வருடங்களுக்கு முன்பு சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்கள்,நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு புயலை கிளப்பினார். இந்தச் சூழலில் தனுஷ் குறித்து சுசித்ரா அளித்த சமீபத்திய பேட்டியில், “என்னுடைய கணவர் கார்த்திக்கிடம் 12 வருடங்களாக விவாகரத்து கேட்டேன். அவர் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர். அப்படி அவர் சொல்லிக்கொண்டு வெளியே வர அவருக்கு எந்த தைரியமும் இல்லை.
ஒரே ரூமில்: அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக இருக்கும்போது ஃபுல்லாக குடித்துவிட்டு ஒரே அறையில் அவரும் தனுஷும் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அந்த ரூமுக்குள் என்ன நடந்தது என்று இரண்டு பேரில் யாராவது ஒருவர் என்னிடம் சொல்லியே ஆக வேண்டும்” என்றார். சுசியின் இந்த பேட்டி கோலிவுட்டில் மீண்டும் புயலை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











