சுச்சி லீக்ஸ்.. தனுஷ் செய்தது இதைத்தான்.. சீக்ரெட்டை போட்டுடைத்த சுசித்ரா

சென்னை: சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதில் நிக்கி கல்ரானி, அனுயா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை பின்னணி பாடகி சுசித்ராதான் வெளியிட்டிருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சூழலில் அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் மீது எக்கச்சக்கமான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

Playback Singer Suchitra Open Talks about Dhanush And Suchi Leaks

பிஸி தனுஷ்: தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.

தனுஷ் 50: நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர். மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும், சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் குபேரா படத்திலும் நடிக்கிறார் தனுஷ்.

சர்ச்சை: இதற்கிடையே தனுஷை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுவதும் வழக்கமாகியிருக்கிறது. குறிப்பாக பெண்கள் விஷயத்தில் பலர் அவரது பெயரை இணைத்து பேசுகின்றனர். ஆனால் தனுஷ் அதற்கு அமைதியாகத்தான் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பார்ட்டி புகைப்படங்கள், அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை பின்னணி பாடகி சுசித்ராதான் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிடுகிறார் என்று அப்போது பேசப்பட்டது.

சுசித்ரா பேட்டி: இந்நிலையில் சுசித்ரா தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். அந்த விஷயத்தில் தனுஷ், எனது முன்னாள் கணவர் கார்த்திக் உள்ளிட்டோர் பிராங்க் செய்துவிட்டனர். பிராங்க் செய்ய ஏதாவது ஒரு அக்கவுண்ட் வேண்டும் என்று பேசிய சமயத்தில் கார்த்திக்தான் எனது அக்கவுண்ட்டை தனுஷிடம் கொடுத்துவிட்டார்.

அதேபோல் இயக்குநர் ஜவஹரின் மொபைலை வாங்கி கார்த்திக்கிற்கு கண்டபடி மெசேஜ் செய்வார் தனுஷ். அதுவும் ஒருவகையான பிராங்க் என்று சொல்வார்கள். இந்த விஷயத்தில் எனது பெயர் தப்பா பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக என்னை மனநிலை சரியில்லாதவர் என்று முத்திரையும் குத்தினார்கள். அதெல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X