அனாதை குழந்தைகளை விற்பார்.. முன்னாள் மாமியார் பற்றி பற்ற வைத்த சுசித்ரா

சென்னை: பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து கார்த்திக் குமார் சுசித்ரா மீது மான நஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுசித்ராவுக்கு அதிரடி உத்தரவை போட்டிருந்தது. இந்தச் சூழலில் மீண்டும் சுசித்ரா பேட்டி அளிக்க ஆரம்பித்திருக்கிறார்.

வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. முக்கியமாக பின்னணி பாடகியாக வெகு பிரபலமானவர் சுசித்ரா. மங்காத்தாவில் இடம்பெற்ற வாடா பின்லேடா, வேட்டைக்காரனில் இடம்பெற்ற சின்னத்தாமரை உள்ளிட்ட பல பாடல்களை பாடிய சுசித்ரா கடந்த 2016ஆம் ஆண்டு தலைப்பு செய்தியாக மாறினார். அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Suchitra Karthik Kumar Tamil Cinema

விவாகரத்து: அவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதற்கு பிறகு சுசித்ராவை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துகொண்டு இப்போது இன்னொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார் சுசித்ரா.

சுசித்ராவின் பேட்டி: கிட்டத்தட்ட 8 வருடங்கள்வரை எங்கிருந்தார் என்று தெரியாத சுசித்ரா இப்போது மீண்டும் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் சுச்சி லீக்ஸ் என்பதே தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் செய்த பிராங்க்தான். முக்கியமாக அந்தப் புகைப்படங்களை திரிஷாதான் வெளியிட்டார் என்று சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.

திரிஷாவின் பதிலடி: மேலும் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறையில் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா, "நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

சுசித்ராவின் பேட்டி: சுசித்ரா பேட்டி கொடுக்கும்போதெல்லாம் பெரும் குண்டை தூக்கி போடுவார் என்றே பலர் சொல்வதுண்டு. அந்தவகையில் சமீபத்தில் அளித்த அவர் அளித்த பேட்டியில், "எனது முதல் கணவரான கார்த்திக் குமாரின் அம்மா வேஸ்ட்தான். அவர் உண்மையாகவே இருக்கமாட்டார். நிறைய பித்தலாட்டங்கள் செய்வார். முக்கியமாக அனாதை குழந்தைகளை விற்பார். அரசுக்கும் பணம் கொடுப்பார். இதனால் அவரை கைது செய்யமாட்டார்கள். தன் பாலின ஈர்ப்பாளரான கார்த்திக் குமாரை நான் திருமணம் செய்துகொண்டதால் நான் ஒரு அமுக்கப்பட்ட கோழியாகவே அவர்கள் பார்வையில் இருந்தேன்.

சண்டை போடாம இருந்தேன்: வீட்டுக்குள் திருமணத்துக்கு எதிராக சண்டை போட்டது எனக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு ஒரு தங்கை. அவளது எதிர்காலம் முக்கியம். அதற்காகத்தான் இதுநாள்வரை நடுத்தெருவுக்கு வந்து சண்டை போடாமல் இருந்தேன். இன்று அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அதனால் எனக்கு வேறு பிரச்னை இல்லை. எனவேதான் தைரியமாகத்தான் பேசுகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X