செல்வராகவன் - ஆண்ட்ரியாவின் அந்த வீடியோ இருக்காம்.. ஓயாத சுசித்ரா.. இன்னும் என்ன கிளம்ப போகுதோ?
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் முக்கியமான இயக்குநராக மாறினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்துகிறார். கடைசியாக அவர் ராயன் படத்தில் நடித்தார். இந்தச் சூழலில் செல்வராகவன் பற்றி பின்னணி பாடகி சுசித்ரா பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
செல்வராகவன் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர். கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை பாதிக்கட்டத்தில் செல்வாவின் கைகளுக்கு வந்தது. அதனையடுத்து தன்னுடைய பதின்ம வயதிலேயே எந்த வித பதற்றமுமின்றி அந்தப் படத்தை இயக்கி முடித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்துக்கு கைக்கொடுக்க ஓரளவு அடையாளப்பட்டது படம்.

காதல் கொண்டேன்: இரண்டாவது படமாக அவர் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம்தான் தனுஷுக்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும், செல்வராகனவுக்குள் மிகச்சிறந்த இயக்குநர் இருக்கிறார் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பித்தது. இன்றுவரை அந்தப் படம் பலரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அவர் இயக்கிய பல படங்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் கவனம்: இடையில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்த செல்வராகவன்; தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமான திருமணம் அன்போடு சென்றுகொண்டிருக்கிறது. இயக்கத்திலிருந்து இப்போது ஒதுங்கியிருக்கும் அவர் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.
அப்படி அவர் பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களையும் அவர் இயக்கவிருக்கிறார். கடைசியாக தனுஷ் எழுதிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் செல்வராகவன் ஒரு இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சுசித்ரா பேட்டி: இதற்கிடையே ஆயிரத்தில் ஒருவன் பட சமயத்தில் செல்வராகவனையும், ஆண்ட்ரியாவையும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. அது அந்த சமயத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில் பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தனுஷ் எனக்கு தம்பி மாதிரி. அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அவர் என்னை செய்த பிராங்க்தான் எனக்கு பெரும் டேமேஜை ஏற்படுத்திவிட்டது. நான் கொடுக்கும் பேட்டிகளை அவர் கேட்டிருக்கிறார் என்பதை நினைக்கும்போது நிம்மதியாக இருக்கிறது.
செல்வராகவன் - ஆண்ட்ரியா வீடியோ: இந்தப் பிரச்னைகளுக்கு அப்புறம்கூட தாஜ் ஹோட்டலில் அவரை சந்தித்தேன். அப்போது உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் லஞ்ச்சுக்கு வா என்றுதான் கூப்பிட்டேன். அவர் ஏன் கார்த்திக் கேங்கில் சேர்ந்து கெட்டு போனார் என்று தெரியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு தனுஷ் என்னை தொடர்புகொண்டு, நான் ஒரு குறும்படம் எடுக்கிறேன். வந்து நடித்து கொடு என்று சொன்னார். ஆனால் நானோ; இப்படித்தான் ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கும்போது செல்வராகவன் - ஆண்ட்ரியா காம்ப்ரமைஸ் வீடியோ இருக்குனு சொல்றாங்க. கலை நோக்கத்தோடுதான்னு சொல்வீர்கள். ஆனால் பிரச்னை வந்துவிடும் எனவே நான் வரவில்லை என்று மறுத்துவிட்டேன்" என்றார். . இதனைப் பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











