twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர். ரகுமானின் சிங்கப்பெண்ணேவுக்கு சிலிர்த்த ரசிகர்கள் - சென்னையில் உற்சாக கொண்டாட்டம்

    |

    சென்னை: இசைத் திருவிழாவை ஒரு இளமைத் திருவிழாவாக சென்னையில் நடத்தி முடித்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இசை நிகழ்ச்சியில் அனைத்து ரசிகர்களும் உற்சாகமாக ஆட்டம் போட்டனர். சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது தனக்கு மன அமைதியை தருகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

    சமீபத்தில் சென்னை ஒய்எம்சிஏ கிரவுண்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது .இதில் ஏ.ஆர்.ரகுமான் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலில் துவங்கினார். அதற்கு பிறகு எல்லா புகழும் இறைவனுக்கே என்ற பாடலை அழகிய தமிழ் மகன் படத்தில் இருந்து பாடினார். அரங்கமே அதற்கு ஆரவாரம் செய்து அதிரவைத்தது.

    Playing a Music concert in Chennai is a relief- A.R.Rahman

    சென்னையில் இப்படி நிகழ்ச்சி நடத்துவது எனக்கு ஒரு மிக பெரிய மன அமைதியை கொடுக்கிறது என்று சொல்லி மகிழ்ந்தார். ஏ.ஆர்.ரகுமான் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது டிஜிட்டல் பின்னணியில் பல சாதனைப் பெண்களின் உருவங்கள் பின்னால் ஓடிக்கொண்டு இருந்தது. பிகிள் படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் பாடிய பொழுது கூட்டம் ஆர்ப்பரித்தது.

    அது மட்டும் இல்லாமல் ஏ.ஆர்.ரகுமானுடைய ஆள் டைம் ஃபேவரைட், ரசிகர்ளுடைய ஆள் டைம் ஃபேவரைட் பாடல்களான வீரபாண்டி கோட்டையிலே, ஊர்வசி ஊர்வசி, ஹம்மா ஹம்மா பாடல்களை பாடிய பொழுது செல் ஃபோன் டார்ச் லைட் ஆன் செய்ய பட்டு அணைத்து ரசிகர்களும் உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர். குறிப்பாக முஸ்தஃபா முஸ்தஃபா பாடல் பாடிய பொழுது அணைத்து செல் போன்களும் அரங்கத்தை பிரகாசப்படுத்தின.

    பாடகர்கள் ஜொனிதா காந்தி, ஸ்வேதா மோகன், சித் ஸ்ரீராம், பென்னி தயாள், ஆண்ட்ரியா, ஹரி சரண், ஏ.ஆர்.அமீன், ராப்பர் ஷிவ், ராஜகுமாரி என அனைவரும் சேர்ந்து அரங்கை மேலும் அமர்களப்படுத்திவிட்டனர். மெர்சல் படத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து இசை வல்லுநர்கள் வாசித்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

    லிடியன் நாதஸ்வரம் தான் இந்த விழாவில் கவனத்தை ஈர்த்த முக்கியமான இன்னொரு கலைஞன். மொத்தமும் இளைஞர் பட்டாளம்தான். 50 வயதைக் கடந்தவர்கள் 50 பேர் கூட இல்லை. ஆண்களுக்கு இணையாக பெண்களும் வந்திருந்தார்கள். ஒரே ஆட்டம்தான். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கத்தி ஆர்ப்பரித்தார்கள்.

    மொத்தத்தில் இந்த இசைத் திருவிழா ஒரு இளமைத் திருவிழாவாகும். ஏ.ஆர்.ரகுமான், நிகழ்ச்சியை செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலில் தொடங்கி அதே பாடலில் முடித்தார்.

    ஹரிகரன், சங்கர் மகாதேவன் போன்றவர்களை அழைத்து வராதது சிறிது ஏமாற்றமே. இருந்தாலும், வந்த கூட்டத்திற்கு அது பற்றி துளி கூட கவலையில்லை. அவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் மட்டும் போதும். அவரும் விதவிதமான கூலர்ஸ், ஜிகுஜிகு ஆடைகளை மாற்றி வசீகரித்தார் என்று தான் சொல்ல வேண்டும். முஸ்தஃபா முஸ்தஃபா பாடலுக்கு ஒட்டு மொத்த கூட்டமும் சேர்ந்து பாடியது. கை கோர்த்து ஆடியது. ஏ.ஆர்.ரகுமான் வெற்றி பெற்ற இடமும் இதுதான்.

    English summary
    A,R,Rahman said he was delighted that the concert in Chennai gave him peace of mind.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X