கரூர்ல ஆம்புலன்ஸ்.. கொளத்தூர்ல பஸ்.. மக்கள் உயிருடன் விளையாடுறாங்க.. பொதுமக்கள் ஆதங்கம்!
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, காலையில் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு, தான் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். இதையடுத்து, கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பினார்.
பெரம்பூரில் பேசி முடித்துவிட்டு பெரம்பூரிலிருந்து கொளத்தூருக்கு விஜய் செல்ல 3 மணி நேரமாகி உள்ளது. மேலும் கெளத்தூரில் அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால், அசம்பாவிதங்களை தவிர்க்க விஜய்யை சீக்கிரம் பேசி முடிக்கும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டதை அடுத்து, விஜய் கொளத்தூரில் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். இதைத்தொடர்ந்து, காவல்துறை எங்களின் பிரசாரத்துக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு தவெக சார்பில் புகார் ஒன்றை கொடுத்துவிட்டு வில்லிவாக்கம் பிரச்சாரத்தை ரத்து செய்தார்.

திமுக தான்: விஜய்யின் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள், விஜய் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்வதற்காக எதிர்கட்சி பல சதிகளை செய்து வருகிறது. ஆனால், மக்கள் சாவதற்கு வழி காட்டியாக திமுக தான் இருக்கிறது. இன்னைக்கு கௌத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்ய வருகிறார் என்று தெரிந்ததும். தேவையே இல்லாமல் காலி பஸ், குப்பை வண்டிகளை எல்லாம் இன்னைக்கு இந்த பக்கம், அந்த பக்கம் போய் கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் கடுப்பை எல்லாம் இப்படி செய்து தீர்த்துக்கொண்டார்கள். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு வருகிறார் என்றால், வண்டியை எல்லாத்தையும் நிறுத்திவிடுவார்கள். ஆனால், இன்னைக்கு பல காலி பஸ் அங்கும் இங்கும் போய் கொண்டே இருக்கிறது. என்ன காரணம் என்றால், அந்த பஸ்ஸில் யாராவது அடிபட்டு செத்தா, அந்த பழியை விஜய் மீது போடுவதற்கான திமுக இந்த வேலையை செய்கிறது


Click it and Unblock the Notifications











