சொகுசா இருந்தது போதும்.. வெளிய வந்து உதவுங்க.. பிரபலங்களுக்கு சோனு சூட் அழைப்பு #wakeupcall

மும்பை: இந்த கொரோனா லாக்டவுனில் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ள வில்லன் நடிகர் சோனு சூட், பிரபலங்கள் உதவ முன் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended Video

மாதவனுக்கு பதிலாக நடிக்கும் நடிகர்!- வீடியோ

புலம்பெயர்ந்த தொழிலாளிகளை சொந்த ஊர்களுக்கு தனது சொந்த செலவில் அனுப்பியது தொடங்கி, ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறார்.

கொரோனா பரவல் குறைவாக இருந்த போது உதவிய பல பிரபலங்கள், கொரோனா கோரத் தாண்டவம் ஆடும் போது, அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

பிரதர் ஆஃப் தி நேஷன்

பிரதர் ஆஃப் தி நேஷன்

உதவி தேவைப்படுபவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட்டின் புகழ் கடந்த சில மாதங்களில் உலகளவில் உயர்ந்து வருகிறது. மகாத்மா காந்தியை Father of our Nation என அழைத்து வரும் நிலையில், சோனு சூட்டை Brother of our Nation என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். பாடகி சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

டிராக்டர் தந்த வள்ளல்

டிராக்டர் தந்த வள்ளல்

கடந்த ஜூலை 30ம் தேதி நடிகர் சோனு சூட்டின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல பிரபலங்கள் சோனு சூட்டை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகை காஜல் அகர்வால், டிராக்டரை தூக்கிக் கொண்டு பரிசாக அளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, சூப்பர்மேன் என பாராட்டி வாழ்த்தி இருந்தார்.

தமிழக மாணவர்களுக்கு உதவி

தமிழக மாணவர்களுக்கு உதவி

ஆரம்பத்தில் சில உதவிகளை செய்து விட்டு, கடமை முடிந்து விட்டது என்று பல நடிகர்கள் கண்டுகாமல் இருக்கும் நிலையில், தொடர்ந்து தனது தொண்டை சிறப்பாக செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். ரஷ்யாவில் லாக்டவுன் காரணமாக தவித்து வந்த 91 தமிழக மருத்துவ மாணவர்களை மீட்க தனி விமானத்தை ஏற்பாடு செய்தும் பேருதவி செய்த சோனு சூட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஏகப்பட்ட கோரிக்கைகள்

ஏகப்பட்ட கோரிக்கைகள்

நடிகர் சோனு சூட் தொடர்ந்து உதவிகளை செய்து வருவதை அறிந்த சாமானிய மக்கள், எங்களுக்கும் உதவி செய்யுங்கள், மருத்துவ உதவி வேண்டும், என பலவிதமான கோரிக்கைகளை அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்டு கேட்டு வருகின்றனர். அவரும் முடிந்த அளவுக்கு உதவி செய்து வருகிறார்.

பிரபலங்களுக்கு சோனு சூட் கோரிக்கை

பிரபலங்களுக்கு சோனு சூட் கோரிக்கை

இந்நிலையில், ஏகப்பட்ட பிரச்சனைகள் சமூகத்தில் இருக்கிறது. செளகர்யமான வாழ்க்கையை விட்டு பல பிரபலங்கள் உதவ முன் வரவேண்டும், ஒரு பிரபலம் ஒரு நோயாளியை தத்து எடுத்தாலும், ஏகப்பட்ட பேருக்கு உதவிகள் போய் சேரும், உறங்கியது போதும் எழுந்து வந்து உதவுங்கள் என தற்போது நடிகர் சோனு சூட் கோரிக்கை வைத்துள்ளார்.

எழுந்து வாங்க

எழுந்து வாங்க

பிரபலங்கள் மருத்துவ செலவுகளுக்கு உதவ முன் வந்தால், நம் நாட்டில் மக்கள் படும் துயரம் நிச்சயம் பாதியாக குறையும் என்றும் கூறிய சோனு சூட், #wakeupcall என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி உள்ளார். கொரோனா குறைவாக இருந்த போது ஓடி வந்து உழைத்த பல பிரபலங்கள், தற்போது ஊமையாக இருப்பது ஏன் என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X