தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை

By Siva

Recommended Video

விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை- வீடியோ

சென்னை: தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நான் விஷாலுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

விஷால், சமந்தா முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் இரும்புத்திரை. புதுமுகம் மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இரும்புத்திரை இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசியதாவது,

பேச்சு

பேச்சு

மித்ரன் முதல் படத்திலேயே சிறப்பாக இரண்டு வேலைகள் செய்துள்ளார். சிறப்பாக படம் எடுத்துள்ளார். மேடையில் பேசவும் தெரிந்து வைத்துள்ளார். எனக்கு மேடை ஏற 20 ஆண்டுகள் ஆனது. பாரதிராஜாவை சந்தித்த பிறகே எனக்கு மேடை ஏறும் தைரியம் வந்தது.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

அதிரடி பாடலில் விஷாலை பார்த்தபோது அமிதாப் பச்சனை பார்த்தது போன்று இருந்தது. விஷால் ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரின் பாரம்பரியம் அப்படி. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விஷால் தனது தந்தையை பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன்.

யுவன்

யுவன்

யுவன் ஷங்கர் ராஜா என் காதலி. எப்பொழுதுமே தூரத்திலேயே இருக்கிறார். 125 படம் பண்ணிட்டார் என்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. முதல் படம் நான் தான் அவரை அறிமுகம் செய்வதாக இருந்தது. பூஜை எல்லாம் போட்டோம். அதில் இருந்து அவர் தள்ளித் தள்ளியே போகிறார். அடுத்தவரின் காதலியாகவே நான் பார்க்க வேண்டி இருக்கிறது. என் பட இசையமைப்பாளராக பார்க்கும் நிலை வரவில்லை. அது நிச்சயம் வரும்.

லவ் பேர்ட்

லவ் பேர்ட்

விஷால் இன்னும் ஆங்ரி பேர்டாகவே இருக்கிறார். லவ் பேர்டாக மாறவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் படம் பார்ப்பதை நிறுத்தவில்லை. எங்கு பார்க்கிறார்கள் என்பதே கேள்வி. அவர்கள் வீட்டில் இருந்து பார்க்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

நண்பன்

நண்பன்

தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நான் விஷாலுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மறுவாரம் போட்டான், மறுநாள் போட்டான், இன்று ரிலீஸ் அன்றே போடுகிறான். விரைவில் ரிலீஸுக்கு முன்பே போடும் சூழ்நிலை வந்துவிடும் போன்று. ஏன் என்றால் தமிழ் திரைப்படத் துறையிடம் இருந்து ஜி.எஸ்.டி. வாங்கும் அரசாங்கங்கள் அதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்றார் செல்வமணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X