Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
90ml trailer - “பழத்தை சுவைக்கும் முன்பே...” டிரெய்லர் சர்ச்சை பற்றி ஓவியா என்ன சொல்றாங்க பாருங்க!
தனது 90 எம் எல் டிரெய்லர் குறித்து டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார் ஓவியா.
சென்னை: தனது 90 எம் எல் பட டிரைய்லர் சர்ச்சையில் சிக்கியது குறித்து நடிகை ஓவியா விளக்கமளித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகு ஓவியா நடித்த படங்களில் ஒன்று 90 எம் எல். அனிதா உதீப் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் 1 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில் இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்த டிரெய்லர்.
சிலர் ஓவியாவின் துணிச்சலைப் பாராட்டினாலும், பலர் இந்தப் படத்தின் மூலம் ஓவியா தனது நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டாரே என திட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சர்ச்சை டீசர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் நடிகை ஓவியா. அதில் அவர், "பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். ட்ரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். படத்துக்கு தணிக்கைக்குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.