மாமனார், மாமியாரை ஒதுக்கி வைத்த கமீலாவுக்கு ஓட்டு போடாதீங்க: நாசர் தம்பி கண்ணீர்

By Siva

Recommended Video

நாசர் தம்பி பரபர வீடியோ!

சென்னை: மாமனார், மாமியாரை கவனிக்காத கமீலாவுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள் என்று நாசரின் தம்பி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் நாசரின் மனைவி கமீலா மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நாசரின் தம்பி ஜவகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,

நாசர்

நாசர்

சொந்த மாமனார், மாமியாரை பார்த்துக் கொள்ளாதவர் கமீலா. பெற்றவர்களை கண்டு கொள்ளாதவர் நாசர். நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மேடைகளில் நல்லவர் போன்று பேசும் நாசர் தனது மனைவியின் பேச்சை கேட்டுக் கொண்டு பெற்றோரையே மறந்துவிட்டார்.

தகுதி

தகுதி

கமீலாவுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை. முதலில் அவருக்கு சீட்டே கொடுத்திருக்கக் கூடாது. அவருக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள். மனவளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள தம்பி இருக்கிறார். அவரையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்.

ஜவகர்

ஜவகர்

நாசரும், கமீலாவும் என்னை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். நான் கொலை செய்யப்பட்டால் அதற்கு நாசர், கமீலா, அவரின் மச்சான் ஆகியோர்தான் காரணம்.

கட்சி

கட்சி

நாசரின் மனைவி என்பதால் கமீலாவுக்கு சீட் கொடுப்பதா?. அதை தவிர அவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது. எனக்கு பின்னால் எந்த கட்சியும் இல்லை. நானாகத் தான் பேசுகிறேன் என்று கூறி கண்ணீர் வடித்தார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X