என்னை மன்னிச்சுடுங்க விஜய் முதலாளி.. நெஞ்சில் மிதித்ததாக கதறிய உதவியாளர் இப்போ மாறிட்டாரு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக; விஜய்யின் முன்னாள் உதவியாளர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், 'ஒருமுறை சாப்பாட்டில் முடி இருந்ததற்காக விஜய் என் நெஞ்சில் மிதித்துவிட்டார்' என சொல்லி குண்டை தூக்கிப்போட்டார். அவரது இந்த குற்றச்சாட்டை விஜய்யின் பெர்சனல் இமேஜை காலி செய்வதற்கு ஒருதரப்பினர் பயன்படுத்தினார்கள். இந்நிலையில் அந்த உதவியாளரே இப்போது வேறு மாதிரி பேசியிருக்கிறார்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது இவரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றுதான் பலரும் சொன்னார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரை பார்க்க வந்த கூட்டம் அதிகரித்ததையும், விஜய் தொடர்ந்து கடுமையாக பேசியதையும் பார்த்து; அவரது பெர்சனல் இமேஜை அசைத்துவிட்டால் போதும் மற்றவையெல்லாம் தானாக நடக்கும் என எதிர் தரப்பினர் கணக்கு போட்டார்கள். சரியாக அந்த நேரம் பார்த்து விவாகர்த்து கோரி விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.

Please Forgive Me Vijay s Ex-Assistant Makes Emotional Plea

உதவியாளரும் என்ட்ரி: சங்கீதாவின் விஷயம் விஜய்யின் பெர்சனல் இமேஜை டேமேஜ் செய்யும் என்றுதான் எல்லோரும் கணித்தார்கள். அதோடு சேர்ந்து; விஜய்யின் உதவியாளர் ஒருவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி மேற்கொண்டு விவாதத்தை கிளப்பியது. அந்தப் பேட்டியில் அவர், "நான் விஜய்யிடம் பத்து வருடங்களாக உதவியாளராக இருந்திருக்கிறேன். அவருக்கு நான்தான் சமைத்தும் கொடுப்பேன். அப்படி ஒருமுறை அவருக்கு சமைத்த சமையலில் முடி இருந்துவிட்டது.

Also Read
அர்ஜுனின் பிளாஸ்ட்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனமும் பிளாஸ்ட்டா இருக்கே ப்பா.. கன்ஃபார்ம் ஹிட்டுதான்
அர்ஜுனின் பிளாஸ்ட்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனமும் பிளாஸ்ட்டா இருக்கே ப்பா.. கன்ஃபார்ம் ஹிட்டுதான்

எட்டி உதைத்த விஜய்?: அதை பார்த்து கோபமடைந்த அவர் எனது நெஞ்சில் ஏறி மிதித்துவிட்டார். அவரை நம்பி நான் மோசம் போய்விட்டேன்" என கூறியிருந்தார். ஏற்கனவே விஜய்யின் இமேஜை காலி செய்ய தயாராக இருந்தவர்கள்; அந்த உதவியாளரின் பேட்டியையும் தங்கள் ஆயுதமாக கையில் எடுத்துக்கொண்டார்கள். அந்தப் பேட்டி சோஷியல் மீடியா எங்கும் ட்ரெண்டானது. நிலைமை இப்படி இருக்க; யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதலமைச்சராகிவிட்டார் விஜய்.

உதவியாளர் பேட்டி: விஜய் முதலமைச்சரானதிலிருந்து அவரை பற்றி விமர்சித்தவர்கள் பேசிய பேட்டியை விர்ச்சுவல் வாரியர்ஸ் அதிகம் பகிர்ந்து, 'இவர்களுக்கெல்லாம் விஜய் அண்ணா தரமான பதிலடி கொடுத்துவிட்டார்' என்று கூறினார்கள். இந்நிலையில் விஜய்யின் உதவியாளர் தனியார் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், "என்னை மன்னிக்க வேண்டும் என அவரிடம் நான் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் ஒரு கனவோடு இருப்பார்கள். விஜய்யோடு நான் பத்து வருடங்கள் பயணித்திருக்கிறேன்.

என்னை மன்னித்துவிடுங்கள் முதலாளி: என்னுடைய கஷ்டங்கள் எல்லாம். நான் இப்போது வாழ்வாதாரம் இல்லாமல் நிற்கிறேன். அவர் எனக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும். என்னை மன்னிச்சுடுங்க முதலாளி. நான் இப்படி பேசுவதை ஊடகங்கள்தான் அவரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். என்னை அவர் வர சொல்வார் என்று நான் எதிர்பார்த்திருக்கிறேன். நான் இதை எனக்காக கேட்கவில்லை. விளம்பரம் வர வேண்டும் என்பதற்காகவும் நான் பேசவில்லை. என்னுடைய குடும்ப கஷ்டம். ஒருநிமிடம் வாழ்ந்தாலும் கனவில் நினைப்பது நனவில் நடப்பது மாதிரி நடந்தால் கோடான கோடி நன்றி சொல்வேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X