அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: உருக்கமான போட்டோ வெளியிட்ட மகேந்திரன் மகன்
Recommended Video

சென்னை: அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுமாறு இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரபல இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தைக்காக பிராத்தனை செய்யுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மகேந்திரனின் மகனான இயக்குநர் ஜான்.
தந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டதுடன் மருத்துவமனையில் இருக்கும் தனது தந்தையின் கையை பிடித்துக் கொண்டு ஒரு புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜான் மகேந்திரன்.
ஜான் மகேந்திரனின் ட்வீட்டை பார்த்தவர்கள் அப்பா நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார், தைரியமாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மகேந்திரன் சாருக்கு ஒன்னும் ஆகாது என்று திரையுலக பிரபலங்களும் ஜானுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











