கொஞ்சம் பார்த்து பண்ணு தல, அப்படியே எங்களுக்கும்: ராஜாவை கேட்கும் சினிமாக்காரர்கள்
சென்னை: இயக்குனர் சினிஷை அடுத்து உதயநிதி ஸ்டாலினும் பாஜகவின் இலவச விளம்பரத்தை நாடியுள்ளார்.
மெர்சல் படத்திற்கு பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து விளம்பரம் கொடுத்தார். பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவோ விஜய்யை ஜோசப் விஜய் என்று கூறி கூடுதல் விளம்பரம் கொடுத்தார்.
அவர்களின் புண்ணியத்தால் மெர்சல் ஹிட்டாகிவிட்டது.

பாஜக
மெர்சல் படத்திற்கு மத்தியில் ஆளும் பாஜக இலவசமாக தேசிய அளவில் விளம்பரம் கொடுத்தது போன்று தங்களின் படத்திற்கும் கொடுக்காதா என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பலூன்
ஜெய், அஞ்சலியை வைத்து பலூன் படத்தை இயக்கியுள்ள சினிஷ் ப்ரொமோஷனுக்கு காசு இல்லை கொஞ்சம் பாத்து ஏதாச்சு பண்ணுங்க சார் என்று ஹெச் ராஜாவிடம் ட்விட்டரில் கேட்டார்.

இப்படை வெல்லும்
உதயநிதி ஸ்டாலின் தனது இப்படை வெல்லும் படத்திற்கு கொஞ்சம் விளம்பரம் கொடுக்குமாறு தமிழிசை, ராஜாவை கேட்கலாம் என இருக்கிறேன் என்றார்.

கலாய்
உதயநிதி கலாய்த்ததை பார்த்து ராஜா பதில் அளிக்க நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர். பாஜகவின் பார்வை நம் மீது படாதா என்று ஆளாளுக்கு கிளம்புகிறார்களே...


Click it and Unblock the Notifications











