கேமராவை தூக்கி படுத்த படுக்கையானேன்: விஜய் பட ஒளிப்பதிவாளர் உருக்கமான வேண்டுகோள்

By Siva

Recommended Video

காயத்துடன் ட்வீட் போட்ட விஜய் பட ஒளிப்பதிவாளர்- வீடியோ

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் டாக்சிவாலா படத்தை தியேட்டரில் பார்க்குமாறு ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராகுல் சங்கிர்தியான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படமான டாக்சிவாலா நாளை ரிலீஸாக உள்ளது. ஆனால் படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே அதை தங்கள் இணையதளத்தில் ஹெச்.டி. பிரிண்ட்டில் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளரான சுஜித் சாரங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

 சமூக வலைதளம்

சமூக வலைதளம்

சமூக வலைதளத்தில் என் புகைப்படங்களை வெளியிட்டு என் சொந்த விஷயங்கள் பற்றி பேசுபவன் நான் அல்ல. ஆனால் டாக்சிவாலா பைரசி விவகாரத்தை பார்த்த பிறகு இந்த புகைப்படங்களை வெளியிட விரும்பினேன். டாக்சிவாலா படத்திற்காக சுமார் 20 கிலோ எடையுள்ள கேமராவை தூக்கியதால் கழுத்தில் பிரச்சனை ஏற்பட்டு ஓராண்டுக்கு முன்பு சிகிச்சை பெற்றேன்.

 தொழில்

தொழில்

நான் என் தொழிலை மாற்ற வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை செய்தார். நான் சில மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தேன். இருப்பினும் நான் சோர்ந்துவிடாமல் மீண்டு வந்தேன். எனக்கு அந்த அளவுக்கு சினிமாவை பிடிக்கும். நான் மட்டும் அல்ல இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருமே கடினமாக உழைத்துள்ளனர்.

கனவு

ஒவ்வொரு படமுமே எங்களின் கனவு தான். டாக்சிவாலா எங்கள் அனைவருக்கும் கனவு. அதில் நிறைய சிஜிஐ உள்ளிட்டவை அடக்கம். அதனால் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது. பைரசியை நிறுத்தவும். நல்ல சினிமாவை தயவு செய்து ஆதரியுங்கள். நன்றி என்று தெரிவித்துள்ளார் சுஜித்.

துல்கர் சல்மான்

டாக்சிவாலா படத்தை தியேட்டரில் பார்க்குமாறு துல்கர் சல்மான் உள்ளிட்ட பல நடிகர்கள் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X