பேட்டக்கு ஏன் ஓரங்கட்டுது, விஸ்வாசத்திற்கு எது ஒர்க்அவுட் ஆகுது?
சென்னை: பேட்ட படத்திற்கு எது மைனஸ், விஸ்வாசத்திற்கு எது மைனஸ் மற்றும் பிளஸ் என்று பார்ப்போம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் கடந்த 10ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் விஸ்வாசத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஓட்டை
பேட்ட படத்தில் ஓவர் பில்ட்அப், படத்தின் நீளம் ஆகியவை ஓட்டைகளாக அமைந்துவிட்டன. படத்தில் ரஜினியை தவிர பிற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. இது ரஜினி ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு?... மற்றபடி ரஜினியை பழையபடி பார்த்ததில் மகிழ்ச்சி. சிறப்பான தரமான சம்பவம் வெயிட்டாக இல்லாமல் போனது மைனஸ்.

மைனஸ்
விஸ்வாசம் படத்தை குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடுகிறார்கள். படத்தை பார்க்க குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு செல்கிறார்கள். அதற்காக விஸ்வாசத்தில் மைனஸே இல்லை என்று சொல்லிவிட முடியாது. முதல் பாதி கொஞ்சம் நீளம், இழுவையாக இருந்தது. ஆனால் அதை சிவா இரண்டாம் பாதியில் சரிகட்டிவிட்டார். அனிகா அடியாட்களிடம் தனியாக சிக்கும்போது அவர்கள் கட்டிடத்தை இடித்துக் கொண்டு உள்ளே வர முயற்சித்த காட்சியை தவிர்த்திருக்கலாம். கொஞ்சம் டூ மச்சா இருந்தது சிவா.

அஜித்
அஜித்துக்கு வயதாகிவிட்டதை மறைத்து இளமையாக காட்ட சிவா முயற்சிக்காதது ஆறுதல். மேலும் அஜித், நயன்தாரா இடையேயான காதல் காட்சிகள் நாசுக்காக இருந்தது குடும்ப ரசிகர்களை கவர்ந்துவிட்டது. வயதிற்கேற்ப காதல் செய்துள்ளார் அஜித்.

அடி
ஹீரோ என்றால் எப்பொழுது பார்த்தாலும் வில்லனை அடித்து நொறுக்கி ஜெயிப்பார் என்று இல்லாமல் அவரும் அடி வாங்குவார் என்று எதார்த்தத்தை காட்டியுள்ளார் சிவா. அதற்கு அவருக்கு பாராட்டுக்கள். அதிலும் குறிப்பாக தூக்குதுரை தூக்குதுரைன்னு படம் முழுக்க அவர் புகழ் பாடாதது பெரிய பிளஸ்ஸாக அமைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications