பிரகாசமான இளம் நடிகர் சீக்கிரம் போய்விட்டாரே.. சுஷாந்த் சிங் மரணம்.. பிரதமர் மோடி இரங்கல்
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகை மட்டுமின்றி இந்திய சினிமா உலகையே உருக்கி இருக்கிறது.

பிரபலங்கள் இரங்கல்
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பல திரைப் பிரபலங்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

பிரதமர் இரங்கல்
தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் சிறப்பாக நடித்து பலரையும் மகிழ்வித்து வந்த இளம் நடிகரின் மரண செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பாலிவுட்டில் பிரகாசமாக ஒளிர்ந்து வந்த இளம் நடிகர், இப்படி சீக்கிரம் இறந்தது மன வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் இரங்கல்
சுஷாந்த் சிங்கின் ராஜ்புத் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார். இந்தியாவின் ரைஸிங் ஸ்டார் சுஷாந்த் சிங்கின் மரண செய்தி தன்னை நிலைகுலைய செய்து விட்டது என்றும், அவருடைய மில்லியன் கணக்கிலான ரசிகர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் பதிவிட்டுள்ளார்.

டிரெண்டிங்கில் சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்கின் மரண செய்தி இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து தங்கள் இரங்கலையும், தோனி படத்தில் அவர் நடித்த காட்சிகளையும் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











