twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெறும் பில்ட்அப் தானா?: பாக்ஸ் ஆபீஸில் திணறும் 'பி.எம். மோடி'

    By Siva
    |

    மும்பை: பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் பாக்ஸ் ஆபீஸில் திணறிக் கொண்டிருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பி.எம். மோடி என்ற பெயரில் படமாக எடுத்தார்கள். ஓமங் குமார் இயக்கிய படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடித்திருந்தார்.

    PM Modi film struggles in Box Office

    இந்த படம் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அதை லோக்சபா தேர்தலுக்கு முன்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் பி.எம். மோடி படம் ரிலீஸானது.

    படம் ரிலீஸான அன்று ரூ. 2. 88 கோடியும், மறுநாள் ரூ. 3.76 கோடியும், மூன்றாவது நாள் ரூ. 5.12 கோடியும், 4வது நாள் ரூ. 2 கோடியும் வசூலித்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்த நிலையில் வசூலில் திணறிக் கொண்டிருக்கிறது.

    இந்த வாரம் மோடி படத்தின் வசூல் மேலும் மோசம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியாக நடித்த விவேக் ஓபராய் தன்னை நிஜ மோடியாகவே நினைத்துக் கொண்டு பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    பட ரிலீஸுக்கு தடை விதிக்கப்பட்டபோது விவேக் ஓபராய் பேசியது யாருக்கும் பிடிக்கவில்லை. மேலும் அவர் தேர்தல் முடிவுகள் குறித்து போட்ட ட்வீட் அவரின் குணத்தை காட்டுகிறது என்று அனைவரும் கழுவிக் கழுவி ஊத்தினார்கள். தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராய் பற்றிய மீமை வெளியிட்டு நெட்டிசன்களிடம் நன்றாக திட்டு வாங்கினார் விவேக் ஓபராய் என்பது குறிப்பிடத்தக்கது.

    மோடி படம் மூலம் தனது கெரியர் சூடுபிடிக்கும் என்று நினைத்தார் விவேக் ஓபராய். ஆனால் அவர் நினைத்ததற்கு நேர் எதிராக நடந்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அவரை கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள்.

    English summary
    PM Modi movie is struggling in the Box Office in the very first week of its release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X