twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே!

    |

    Recommended Video

    PM Modi appreciate Actor Vivek | நடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே!

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நடிகர் விவேக்குக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடனான சந்திப்புக்காக அண்மையில் மகாபலிபுரம் வந்தார். அப்போது கோவளத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.

    காலையில் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், கடற்கரையையும் சுத்தம் செய்தார். இந்நிலையில் பிரதமர் மோடி மகாபலிபுரம் கடற்கரை குறித்து நேற்று கவிதை வெளியிட்டிருந்தார்.

    "அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்".. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு

    அடியேனின் வணக்கம்

    அடியேனின் வணக்கம்

    இந்தியில் வெளியிட்ட அந்தக் கவிதையை அலைகடலே அடியேனின் வணக்கம்.. என்ற தலைப்பில் தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்து பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் அந்த கவிதை வைரலானது.

    சர்வ சக்தியுடையது

    அதனை பார்த்த நடிகர் விவேக், இயற்கையை வணங்குவது கடவுளை வணங்குவதற்கு சமம், ஏனெனில் இயற்கையே சர்வ சக்தியுடையது.. பெரியது.. மதிப்பிற்குரிய நரேந்திர மோடி சார்.. மகாபலிபுரம் கடற்கரை குறித்த உங்களின கவிதைக்காக நம் தேசத்தின் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    விவேக்கிற்கு நன்றி

    நடிகர் விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த பிரதமர் மோடி, விவேக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இயற்கையின் மீதான மரியாதை என்பது நமது நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும் காலை அமைதியும் எனது சில எண்ணங்களை வெளிப்படுத்த சரியான தருணங்களை அளித்தது என தெரிவித்துள்ளார்.

    தமிழ் மொழி அழகானது

    இதேபோல் தனது கவிதையை பாராட்டி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்கும் நன்றி கூறிய பிரதமர் மோடி, ஒரு துடிப்பான கலாச்சாரத்தை வளர்த்த உலகின் பழமையான மொழியில் என்னை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. தமிழ் மொழி அழகானது, தமிழ் மக்கள் விதிவிலக்கானவர்கள் என தெரிவித்துள்ளார்.

    English summary
    PM Modi says thanks to Actor Vivek and Producer Dhananjayan for thanking his Poem. PM modi wites Poem about Mahabalipuram beach.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X