Naa ready song: பிரதமர் மோடி பாடிய விஜய் பட பாடல்.. எப்படில்லாம் யோசிக்கிறாங்க!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய் -லோகேஷ் இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.
படத்தின் ப்ரமோஷன்களை சிறப்பாக நடத்தி வருகிறது படக்குழு. இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளது.

பிரதமர் மோடி பாடுவதாக அமைந்த விஜய் பட பாடல்: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் -லோகேஷ் இந்தப் படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 52 நாட்கள் காஷ்மீரில் மிகுந்த குளிர், நிலநடுக்கத்திற்கிடையில் நடந்து முடிந்தது. தொடர்ந்து சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.
இந்தப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 35 நாட்கள் உள்ளதாக ரசிகர்கள் எண்ணிக்கை தெரிவித்து வருகின்றனர். படத்தின் ரிலீசுக்காக மரண மாஸாக அவர்கள் வெயிட் செய்து வருகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் கடந்த வாரத்தில் இந்தப் படத்தின் புக்கிங், லண்டனில் துவங்கப்பட்டு, 24 மணிநேரத்திற்குள்ளாகவே மிகப்பெரிய அளவில் விற்றுத் தீர்ந்தது. இந்த டிக்கெட் புக்கிங், படத்தின் ரிலீசுக்கு 6 வாரங்களுக்கு முன்னதாகவே நடத்தப்பட்டது. இந்த அளவில் இந்த முயற்சி லியோ படத்திற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் பிரமோஷன்களையும் படக்குழுவினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரியில் துவங்கப்பட்ட நிலையில், படத்தின் ப்ரமோஷனும் ஒருபக்கம் சிறப்பாகவே நடந்து வந்தது. படத்தின் காஷ்மீர் ஷெட்யூலில் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து காஷ்மீர் ஷெட்யூலின் வீடியோக்கள் வெளியாகி விஜய்யின் மாஸ் லுக்கை வெளிப்படுத்தியது.
தொடர்ந்து விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரின் பிறந்தநாட்களையொட்டி படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கொள்ளைக் கொண்டன. குறிப்பாக நா ரெடி பாடல் மற்றும் அர்ஜூனின் கிளிம்ப்ஸ் வீடியோ யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்தன. நா ரெடி பாடல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடலின் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடியையும் விஜய்யின் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. அவர் விஜய்யின் நா ரெடி பாடலை பாடுவதாக தற்போது வீடியோ வெளியிட்டு அசத்தியுள்ளனர். ஏஐ மூலம் நா ரெடி தான் பாடலை பிரதமர் மோடியின் குரலை வைத்து மிக்ஸ் செய்து வெளியிடப்பட்டுள்ள புதிய வீடியோ, அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் மோடி ஆட்டம் போடும்படியான காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











