twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    PM Narendra Modi ட்ரெய்லர்: குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர்களை காப்பாற்றிய மோடி

    By Siva
    |

    மும்பை: குஜராத் கலவரத்தின்போது பிரதமர் மோடி இஸ்லாமியர்களை காப்பாற்றியது போன்று பி.எம். நரேந்திர மோடி பட ட்ரெய்லரில் காண்பித்துள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் படமாக எடுத்துள்ளனர். ஓமங் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

    மீண்டும் ஒரு இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போனி கபூர் மீண்டும் ஒரு இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போனி கபூர்

    ஆர்.எஸ்.எஸ்.

    மோடி சிறு வயதில் டீ விற்றது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றது, குஜராத் முதல்வரானது, பின்னர் பிரதமர் ஆனது என்று அவரின் முன்னேற்றத்தை காண்பித்துள்ளனர். சுருக்கமாக சொன்னால் மோடியை ஆக்ஷன் கிங்காக காண்பித்துள்ளார்கள்.

    இஸ்லாமியர்கள்

    இஸ்லாமியர்கள்

    2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது மோடி இஸ்லாமியர்களை காப்பாற்றுவது போன்று ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். அவர்கள் நம்மை மீண்டும் தாக்கினால் அவர்களின் கைகளை வெட்டுவேன். எங்களின் தியாகத்தை பார்த்திருக்கிறீர்கள், பழிவாங்குவதை தற்போது பார்ப்பீர்கள் என்று விவேக் ஓபராய் ட்ரெய்லரில் வீராவேசமாக வசனம் பேசியுள்ளார்.

     ரிலீஸ்

    ரிலீஸ்

    லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்கிறது. இந்நிலையில் பி.எம். நரேந்திர மோடி படம் ஏப்ரல் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

     காங்கிரஸ்

    காங்கிரஸ்

    லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை வெளியிடுவது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    PM Narendra Modi trailer has been released. It has shown Modi as man of action.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X