இயற்கைக்கு யாவரும் ஒன்றே!
Recommended Video

ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் | Oneindia Tamil
ஒரு நடிகையின் மரணம்
அவள் இளமையோடு
தொடர்புடையது.
அவளுக்கு இளமை நிலவிய
காலத்துக்கும்
நம் நினைவுகளுக்குமான
தொடர்பில் எழும் துயரம் அது.

நம் இளமைக்கு
எந்தப் பதிவுகளும் இல்லை.
அவளுடைய பதிவுகள் வழியே
நாம் நம் நினைவுகளில் ஆழ்கிறோம்.
இறந்துவிட்ட நம் தந்தையரின்
கனவுகளை மொய்த்தவள் அவள்.
அதனால் அவள் மரணம்
நமக்குத் தாயிழப்பைப் போன்றது.
நமக்குப் பருவம் அரும்பியபோது
கண்களில் பட்டவள் அவள்.
அதனால் அவள் மரணம்
கைக்கிளை நினைவின் துயரமாகிறது.
இறக்கும் ஒருவர்
விட்டுச்செல்லும் வெற்றிடம்தான்
நம் துயரங்களின் வேர்.
அதை இட்டு நிரப்பமுடியாத
இயலாமைதான்
நம் கண்ணீர்.
நிகரற்ற அழகு
நிகரற்ற அறிவு
நிகரற்ற அன்பு
பாகுபாடுகள் நமக்குத்தாம்.
இயற்கைக்கு யாவரும் ஒன்றே !


Click it and Unblock the Notifications











