சவுந்தர்யா கல்யாணம் : ரஜினி ஆடுனதைப் பார்த்தீங்களே.. தனுஷ் பாடுனதைக் கேட்டீங்களா?

சவுந்தர்யா திருமணத்தில் தனுஷ் ஆடிப்பாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

Recommended Video

Soundarya Rajinikanth Marriage: சவுந்தர்யா திருமணத்தில் தனுஷ் ஆடிப் பாடும் வீடியோ

சென்னை: ரஜினி மகள் சவுந்தர்யா திருமணத்தில் நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் ஆடிப்பாடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. சவுந்தர்யா, தொழிலதிபரும் நடிகருமான விசாகனைத் திருமணம் செய்துள்ளார். நான்கு நாட்களாக இவர்களது திருமணம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினி, 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலானது.

தனுஷ் வீடியோ:

தனுஷ் வீடியோ:

இந்நிலையில் சவுந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் ஆடிப் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து நடனமாடுகிறார் தனுஷ்.

கொலைவெறி பாடல்:

கொலைவெறி பாடல்:

கூடவே தனது கொலைவெறி பாடலையும் விருந்தினர்களுக்காக மைக்கில் பாடிக் காட்டுகிறார். அதனை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ரசித்துக் கைதட்டுகின்றனர். அப்போது உறவினரும், இசையமைப்பாளருமான அனிருத்தும் தனுஷ் உடன் இருக்கிறார்.

தாமதமாக வந்த தனுஷ்:

தாமதமாக வந்த தனுஷ்:

ரஜினியின் மூத்த மருமகனான தனுஷ், திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். சவுந்தர்யா திருமண விவகாரத்தில் அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் அசுரன் படப்பிடிப்பில் இருந்ததால் தான் தாமதமாக வந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது.

கலர்புல் நிகழ்ச்சி:

கலர்புல் நிகழ்ச்சி:

மேலும், சவுந்தர்யாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் மாமா ரஜினியும், மருமகன் தனுஷும் ஒரே போன்று உடை அணிந்திருந்ததும் ரசிக்கும்படி அமைந்திருந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மூலம், சவுந்தர்யா வரவேற்பு நிகழ்ச்சியை தனுஷும், அனிருத்தும் சேர்ந்து எவ்வளவு கலர்புல்லாக மாற்றி இருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X