கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்
சென்னை: கவிஞரும் பாடலாசிரியருமான மு.மேத்தாவின் துணைவியார் சையது ராபியா என்கிற மல்லிகா மேத்தா (62), இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடல், சென்னை பெசண்ட் நகர் கலாச்சேத்திரா காலனி, ராஜராஜன் தெருவில் இருக்கும் மு.மேத்தாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

கவிஞர்களும், பாடலாசிரியர்களும், இலக்கியவாதிகளும் மல்லிகா மேத்தா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது உடல் நாளை கொட்டிவாக்கத்தில் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்படுகிறது.
கவிஞர் மு மேத்தாவின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான கண்ணீர் பூக்கள் வெளியானதில் மல்லிகா மேத்தாவின் பங்கும் உண்டு. அதை கவிஞர் மேத்தா இப்படிக் குறிப்பிட்டிருந்தார் ஒரு கவிதையில்...
கண்ணகி கால் சிலம்பைக் கழற்றினாள்
மாணவர்கள் சிலப்பதிகாரம் படித்தார்கள்
என் மனைவி கைவளையல் கழற்றினாள்
நீங்கள் கண்ணீர் பூக்கள் படிக்கிறீர்கள்!


Click it and Unblock the Notifications











