யாருடா இந்த பீட்டா... இனி உடைப்போம் தடைகளை கேட்டா..!

By Shankar

- கவிஞர் சினேகன்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி, இருவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடல் இசைத்து வெளியிட்டிருக்கிறார்கள். கவிஞர்கள் அறிவுமதி, பா.விஜய், ஆகியோர் கவிதை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

இயக்குநர்கள் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, ஆகியோர் தங்களது கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார்கள். கமல், ரஜினி ஆகிய இருபெரும் இமயங்களும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

Poet Snehan's lyrics in favour of Jallikkattu

தமிழர் பிரச்சனைக்காக தொடர்ந்து படைப்புகளைத் தந்து வரும் கவிஞர் சினேகன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் இருவரும் இணைந்து 'யாருடா நீங்க' என்ற தலைப்பில் ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த பாடலில் இருவருமே தோன்றி நடித்தும் இருக்கிறார்கள். "யாருடா இந்த பீட்டா- இனி உடைப்போம் தடைகளை கேட்டா.." என்பது போன்ற உணர்ச்சி வரிகளைப் போட்டு உசுப்பேற்றியிருக்கிறார் சினேகன். அதற்கு பொருத்தமாக வீறு கொண்டு இசைமைத்திருக்கிறார் தாஜ்நூர்.

இதோ அந்த பாடலின் லிங்க்-

பாடல் வரிகள்-

யாருடா
நீங்க யாருடா
யாருடா
நீங்க யாருடா..

யாருடா இந்த பீட்டா- இனி
உடைப்போம் தடைகளை கேட்டா..

நீங்க தின்பது எங்க சோறுடா
நாங்கஜெயிக்க பொறந்த ஆளுடா
எங்கள தொட்டா உனக்கு பாலுடா...

யாருடா
நீங்க யாருடா
யாருடா
நீங்க யாருடா

எழுடா-தமிழா
எழுடா..

பல்லவி

படையை திரட்டி
தடையை மிரட்டி
மஞ்சு விரட்டு----நமை
தடுக்க இங்கே
யார் வந்தாலும்---அவன்
தலையை உருட்டு

நம்ம பாட்டன் பூட்டன்
காலம் தொட்டு
நடந்த விளையாட்டு--நம்ம
பரம்பரை மானம்
காத்து நிற்கும்
வீர விளையாட்டு...
வீர விளையாட்டுடா...

மஞ்சு விரட்டு
மஞ்சு விரட்டு

இதை நேற்று வந்தவன் தடுப்பதா?
அதை பார்த்து நாமளும் மலைப்பதா?
யாருடா
நீங்க யாருடா

யாருடா இந்த பீட்டா--- இனி
உடைப்போம் தடைகளை கேட்டா..

சரணம்1

ஆடு மாடு
கோழி எல்லாம்
எங்க பிள்ளைடா--நாங்க
ஓடி ஆடி
விளையான்டா
என்ன குத்தமடா....

காட்ட நம்பி
மாட்ட நம்பி
வாழும் கூட்டமடா---எங்க
அடையாளத்த
அழிக்கிறிங்க
என்ன நியாமடா...

எத்தனை உயிர்களை
இழந்தோம் நாங்கள்
எங்கள் ஈழத்தில்--- அப்போ
ஒருத்தன் கூட
என்னான்னு கேட்கல
இந்த உலகத்தில்...

தமிழன் என்றால்
எப்போதுமே
ரொம்ப மட்டமா---வா
உண்மையிலே
ஆம்பளயான்னா
போட்டு பார்ப்போமா...

இதுக்கு மேல
எங்களுக்கு
பொறுமைஇல்லடா----இனி
எவன் வந்து
தடுத்தாலும்
ரொம்ப தொல்லடா...

மாடுகள நாங்க
மதிக்கிறோன்டா உசுரா..
தடைக்கேட்ட பீட்டா
நீங்க பெரிய --------

யாருடா
யாருடா இந்த பீட்டா---இனி
உதைப்போம் தடைகள் கேட்டா...2

சரணம்2

கூலிக்காக
மாரடிக்கும்
கோழைபசங்களா---உங்க
கோத்திரம் தான்
எங்களுக்கு
தெரியும் போங்கடா...போங்கடா..

எங்களோட
பண்பாட்டையே
அழிப்பது ஏனடா--- நீங்க
எவனோ கொடுத்த
காசுக்காக
கொறைப்பது ஏனடா....

நீதிமன்றத்த
கோயில் போல
மதிச்சோம் நாங்கடா---எங்க
நம்பிக்கை எல்லாம்
வீணாப்போச்சு
விலகிப் போங்கடா...

யானை படையும்
சிங்க நடையும்
கொண்ட இனமடா - உங்கள்
தடையை
உடைக்கப்போவதெங்கள்
வீரம் தானடா...

தமிழனோட
வீரம் இந்த
தரணியே அறியும்--- எங்கள
சீண்டிப் பார்க்க
வேண்டாம் -இந்த
பூமி எரியும்....

மாடுகள நாங்க
மதிக்கிறோன்டா உசுரா...
தடை க்கேட்ட பீட்டா
நீங்க பெரிய -------

யாருடா
யாருடா இந்த பீட்டா--- இனி
உடைப்போம் தடைகள் கேட்டா...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X