twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..!' - காவியக் கவிஞர் வாலி நினைவலைகள்! #Vaali

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : காவியக் கவிஞர் வாலியின் பிறந்ததினம் இன்று. அவரது கைப்பட்டு வார்த்தைகள் வண்ண வானவில்லாகியிருக்கின்றன; வரிகள் அழகான அந்தி வானமாயிருக்கின்றன.

    கவிஞர் வாலி தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வரம். அவரது வரிகளில் உருவான பாடல்கள் எட்டுத்திக்கும் இசைக்கப் பட்டிருக்கின்றன. பலரது வாழ்வை ரசனைமிகச் செய்திருக்கின்றன. அவரது உவமைக்கும், வர்ணனைக்கும் பலகோடி ரசிகர்கள்.

    வாலியின் மறைவு தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு. வாலியின் பிறந்தநாளன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் நினைவலைகளுல் சில இங்கே...

    வர்ணனைக் கவி!

    என்ன ஒரு வர்ணனை! காவியக் கவிஞர் வாலி பிறந்த நாள் #HBDVaali

    பாடல் வரி

    மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா? மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?

    மரணப் படுக்கையிலும்

    மரணப்படுக்கையில் #வாலி.. பேச இயலவில்லை..! மருத்துவர் #நரசிம்மன் ஒரு காகிதத்தை கொடுத்து, "சொல்ல விரும்புவதை எழுதிக்காட்டுங்கள்" என்றார்.. "சுவாசம், மிகமோசம்.. அந்த #நரசிம்மனால் (கடவுள்/மருத்துவர்) கூட என்னை காக்க இயலாதா..?" என்றாராம். #இயல்பு_மாறாது #புகழஞ்சலி

    அன்புக்கடல் ஆழம் யாரும்...

    வங்க கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு... அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே... காவிய கவி தந்த "கவிஞர் வாலி" பிறந்த தினம் இன்று!

    மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்... வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..! #HBDvaali

    தகுமா

    நிலவிடம் வாடகை வாங்கி... விழி வீட்டினில் குடி வைக்கலாமா... நாம் வாழும் வீட்டிக்குள் வேறாரும் வந்தாலே தகுமா? #வாலி இனிய பிறந்தநாள் கவிஞர் வாலி

    வாலி கவிதை

    கும்பகோணம் குழந்தைகள் தீவிபத்தின்போது #வாலி எழுதிய கவிதை..!

    "நிறைய கோயில்கள் கொண்ட ஊராமே குடந்தை..!

    அப்படியானால் இந்த அக்கிரமத்துக்கு அத்துணை தெய்வங்களுமா உடந்தை!"

    காலம் தாண்டிய கவிஞர்

    "மன்னவனே அழலாமா"வும் இவர்தான்; "நான் ஆணையிட்டால்"ம் இவர்தான்; "முக்காலா முக்காபுலா"வும் இவர்தான்; "மின்வெட்டு நாளில் இங்கே"யும் இவர்தான். #வாலி

    English summary
    Epic poet vaali's birthday today. The words of his hand made colored rainbow; His lines make blue sky. Poet Vaali is a boon for Tamil cinema. Cinema song lyrics of his are tuned many people.காவியக் கவிஞர் வாலி பிறந்ததினம் இன்று. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தலைமுறை தாண்டிய கவிஞர் வாலி. அவரது பாடல்வரிகளும், கவிதைகளும் பலருக்குள் நம்பிக்கை விதைத்திருக்கின்றன.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X