வாலியின் மரணம்... திரையுலகின் பிரார்த்தனை வீணானது!

அவர் நலமடைந்து வந்து மீண்டும் பாடல்களை புனைய வேண்டும் என தமிழ் திரையுலகமே பிரார்த்தித்து வந்தது. இப்போது அத்தனை பேரும் வாலியின் மறைவால் துயருற்று நிற்கின்றனர்.
82 வயது வாலி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் வாலியின் உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.
சமீபத்தில் நடிகர் கமல், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் நேரில் போய் வாலியைப் பார்த்துவிட்டு வந்தனர். ஆனால் அவரால் வந்திருந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலை.
வாலியின் உடல் நலமடைய வேண்டி தமிழ் திரையுலகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவில் நூறாண்டு வாழ்ந்து கலைச் சேவை செய்ய வேண்டும் என்ற அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றி விட்டு பிரியா விடை பெற்று விட்டார் வாலி.


Click it and Unblock the Notifications











