twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்க சொன்னதை நான் மாத்தி சொல்லிக்கவா..? வாலியிடம் கேட்ட ரஜினி

    |

    Recommended Video

    நீங்க சொன்னதை நான் மாத்தி சொல்லிக்கவா..? வாலியிடம் அப்படி என்ன கேட்டார் ரஜினி- வீடியோ

    சென்னை: வாலியிடமிருந்து ஒரு விஷயத்தை அவரின் அனுமதியோடு காப்பியடித்திருக்கிறார் ரஜினி.

    வாலி எவ்வளவு சாதனைகளை செய்திருந்தாலும், எதையுமே தலையில் ஏற்றிக்கொள்ளாதவர். தலையில் கணமிருந்தும் தலைக்கணமில்லாமல் இருந்தவர்.

    பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய வாலியைப் பற்றிய சில சுவாராஸ்ய நினைவுகள்...

    அப்பா வைரமுத்து மீது பாலியல் புகார்: சின்மயிக்கு பதில் அளித்த மகன் கபிலன் அப்பா வைரமுத்து மீது பாலியல் புகார்: சின்மயிக்கு பதில் அளித்த மகன் கபிலன்

    இயக்குனர் சக்தி

    இயக்குனர் சக்தி

    கவிஞர் வாலி ஒரு சகாப்தம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொன்னாலும், அவரிடம் இருந்த தன்னடக்கம் மிகவும் மெச்சிக்கத் தக்க ஒன்று. ஒரு நிகழ்ச்சியில் பேசிய வாலி, என்னதான் பாடல் நன்றாக எழுதினாலும், என்னதான் பாட்டு ட்யூன் நன்றாக இருந்தாலும் அதை எவ்வாறு இயக்குனர் காட்சிப்படுத்துகிறார் என்பதில்தான் அந்த பாடலின் வெற்றி இருக்கிறது எனக் கூறியிருப்பார். அதற்கு எடுத்துக்காட்டாக "போனால் போகட்டும் போடா பாடலை.." இயக்குனர் பீம்சிங் படமாக்கியிருக்கும் விதத்தை சுட்டிக்காட்டியிருந்தார். ஆரம்பத்தில் அந்த பாடலை எடிட் செய்துகொண்டிருக்கும்போது, சிவாஜி கணேசனை நடக்க மட்டுமே விட்டு எடுத்திருக்கிறீர்கள். எம்.எஸ்.வியின் அழகான ட்யூனையும் கண்ணதாசனின் வரிகளையும் வீணடித்துவிட்டீர்கள் என இயக்குனர் பீம்சிங்கிடம் வாலி வருத்தப்பட்டாராம். இரண்டு நாட்கள் கழித்து வந்து பாருங்கள் என பீம்சிங் சொல்லியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு பிறகு பாடலின் முழு வடிவத்தைப் பார்த்து வாலி அசந்துபோயிருக்கிறார். பாடலை வீணடித்துவிட்டார் என நினைத்தேன், சில விஷயங்களை அதில் சேர்த்து அற்புதமாக காட்சிப்படுத்தியிருந்தார் என பீம்சிங்கை புகழ்ந்திருக்கிறார். இப்படி இயக்குனரை புகழ்ந்த வாலி 17 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். வடைமாலை என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

    மெட்டுக்கு பாட்டு

    மெட்டுக்கு பாட்டு

    முன்பெல்லாம் குழந்தை பிறந்த பிறகு சட்டை தைப்பார்கள், இப்போது சட்டையை தைத்துவிட்டு அதற்கேற்றதுபோல் குழந்தையை நசுக்க வேண்டியுள்ளது என ட்யூனுக்கு பாட்டெழுதும் நிலையை விமர்சிக்கிறார். எப்போதும் எம்.எஸ்.வியை அண்ணன் என்றே அழைக்கும் வாலி அவரைப் பற்றி பேசும் எல்லா மேடைகளிலும், எம்.எஸ்.வியைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு சோத்துக்கு வழியில்லை. அவரை சந்தித்தபிறகு சோறு திங்க நேரம் இல்லை. நான் இப்போது இருக்கும் நிலை என்பது அண்ணன் எம்.எஸ்.வி போட்ட பிச்சை என்று கூறுவார். அழகர் மலைக் கள்ளன் படத்தில் முதன் முதலில் பாடல் எழுத வாலிக்கு வாய்ப்பு நல்கியவர் எம்.எஸ்.வி. அப்படத்திற்காக "நிலவும் தாரையும் நீயம்மா.. உலகம் ஒருநாள் உனதம்மா" என்ற பாடல் மூலம்தான் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் வாலி.

    பாலச்சந்தர்

    பாலச்சந்தர்

    வாலிக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்குமான உறவு எப்படிப்பட்டதோ அதேபோல்தான் பாலச்சந்தருக்கும் ரஜினிக்குமான உறவு என ரஜினி ஒப்பிட நினைத்துள்ளார். விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோத்துக்கே வக்கில்லை. அவரை சந்தித்த பிறகு சோறு திங்கவே நேரமில்லை என வாலி சொன்னதை, பாலச்சந்தரை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோத்துக்கே வக்கில்லை. அவரை சந்தித்த பிறகு சோறு திங்கவே நேரமில்லை என சொல்லிக்கவா என வாலியிடம் கேட்டாராம். சொல்லிக்கோ.. எவன் வீட்டு சொத்து..? என அனுமதியளித்திருக்கிறார் வாலி.

    வாலி

    வாலி

    வாலி ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். ஒவ்வொரு பேட்ஸ்மேன் பவுலர்களின் தனித் திறமையை பட்டியலிட்டு சொல்லக்கூடியவர். சிலநேரங்களில் மேட்சின் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானிக்கும் சக்தி அவரிடம் இருந்ததாக தரவுகள் கிடைக்கின்றன. கிரிக்கெட்டில் சச்சின் எப்படியோ அவ்வாறே சினிமாவில் வாலி எனவும் சொல்லலாம். ஒருநாள் போட்டியில் பதினைந்தாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்பதுபோல், வாலியும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். 16 வயதில் சச்சின் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியை விளையாடும்போது அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்களாக வாகர் யூனுஸ், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்றவர்கள் இருந்தார்களோ அப்படித்தான், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், மருதகாசி போன்ற ஜாம்பவான்களும் கோலோச்சிக்கொண்டிருந்த நேரத்தில் வாலி சினிமாவுக்கு வந்தார். அதிவேக பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன் மெஷினாக ரன்களை சச்சின் குவித்ததுபோல், வாலியும் பாடல்களை உருவாக்கும் இயந்திரமாக செயல்பட்டார். இம்ரான் கானால் சச்சின் பாராட்டப்பட்டதுபோல், வாலியும் கண்ணதாசன் போன்ற சக கவிஞர்களால் பாராட்டப்பட்டு நட்பில் இணைந்தார். இந்த ஒப்பீடு வித்தியாசமானதுதான், வாலி கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் என்பதால் அது அவசியமாகிறது. எப்போதுமே அவருடைய பாடல்கள் பவுண்டரிகளைக் கடந்து ரசிக்கப்படுபவைதானே...!

    English summary
    Poet Vaali 87th birthday today. Vaali loved to watch cricket matches.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X