twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்கிருந்தாலும் வாழ்க பாடல் அணிந்திருந்த ஆபரணமே அதன் சோகம்தான்.. ஏஎல் ராகவனுக்காக உருகிய வைரமுத்து!

    |

    சென்னை: பாடகர் ஏஎல் ராகவன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் ஏஎல் ராகவன். நெஞ்சில் ஓர் ஆலையம் படத்தில் இவர் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க.. பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்.

    Poet Vairamuthu condoles for AL Ragavan demise

    ஏராளமான பாடல்களை பாடியுள்ள ஏஎல் ராகவன், பழம் பெரும் நடிகையான எம்என் ராஜத்தை காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஏஎல் ராகவன் சென்னை ராயப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை ஏஎல் ராகவனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஏஎல் ராகவன். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்தார் அவருக்கு வயது 87.

    உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்! உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்!

    ஏஎல் ராகவனின் மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஏஎல் ராகவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Poet Vairamuthu condoles for AL Ragavan demise

    அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஏ.எல்.ராகவன்
    ஒரு தலைமுறையைத்
    தடவிப்போன மயிலிறகு.

    எங்கிருந்தாலும் வாழ்க பாடல்
    அணிந்திருந்த ஆபரணமே
    அதன் சோகம்தான்;
    அணிவித்தது அவர் குரல்தான்.

    மனைவியார் எம்.என்.ராஜம்,
    குடும்பத்தார், கலையுலகத்தார்
    அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கல்... என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Poet Vairamuthu condoles AL Ragavan demise. Singer and Actor AL Ragavan passed away today morning.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X