twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாட்டின் நலமே நமது நலம்.. கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை தருகிறார் வைரமுத்து!

    |

    சென்னை: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தங்கள் திருமண மண்டபத்தை அரசுக்கு தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    கொரோனா ஒரு கொரில்லா யுத்தம் | கவிஞர் வைரமுத்து |FILMIBEAT TAMIL

    உலகளவில் பெரும் தொற்று நோயாக உருவாகி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பரவி உள்ளது. இதனால் இதுவரை உலகம் முழுக்க 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    Poet Vairamuthu has announced Tamilnadu govt can use his inn as hospital

    13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 114 பேர் பலியாகியுள்ளனர்.

    தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்து கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தங்களின் திருமண மண்டபத்தை அரசுக்கு தருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டின் நலமே நமது நலம் என பதிவிட்டுள்ளார்.

    அந்த ஹீரோயினுடன் என்னை இணைத்து வந்த செய்திகள் உண்மைதான், ஆனால்.. பிரபல வில்லன் நடிகர் ஷாக் தகவல்!அந்த ஹீரோயினுடன் என்னை இணைத்து வந்த செய்திகள் உண்மைதான், ஆனால்.. பிரபல வில்லன் நடிகர் ஷாக் தகவல்!

    ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் தன்னுடை வீட்டை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தங்களின் கல்லூரி மற்றும் கட்சி அலுவலகத்தை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையாக மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Poet Vairamuthu has announced Tamilnadu govt can use his inn as hospital for Corona patients.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X