நெடுஞ்சாலைகள் பாதசாரிகளுக்கல்ல.. தண்டவாளங்கள் தற்கொலைக்கல்ல.. உருகும் வைரமுத்து!

சென்னை: சொந்த ஊர்களுக்கு செல்லும் அப்பாவி தொழிலாளர்கள் வழியிலேயே மாண்டுபோவது உருகியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

Recommended Video

ஒரு ஆண்டுக்கு ஊரடங்கு | Vairamuthu Latest கவிதை | கவிப்பேரரசு வைரமுத்து

கொரோனா லாக்டவுன் காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் மற்ற மாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததால் பல 100 கிலோ மீட்டர்கள் நடந்தே செல்கின்றனர்.

 Poet Vairamuthu pens about Migrants employees

சிலர் சரக்கு லாரிகளிலும் கிடைக்கும் வாகனங்களிலும், சைக்கிள்களிலும் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். அந்த வகையில் சென்றவர்கள் அவுரங்கபாத் அருகே தண்டவாளத்தில் படுத்து இளைப்பாறியபோது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாயினர்.

இதேபோல் சரக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர்களில் பயணித்த மக்களும், மத்தியப் பிரதேசம், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் விபத்தில் சிக்கி கொத்து கொத்தாக மரணமடைந்தனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து புலம் பெயர் தொழிலாளர்களுக்காக உருக்கமாக ஒரு கவிதையை வடித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள்
பாதசாரிகளுக்கல்ல

தண்டவாளங்கள்
தற்கொலைக்கல்ல

விஷம்
பசிக்கு உணவல்ல

சலுகை
அறிவிப்புக்கல்ல

கவிதை
கொண்டாட்டத்திற்கல்ல...

 Poet Vairamuthu pens about Migrants employees

இந்த கவிதையை வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். ஏற்கனவே விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரிய அறிவிப்புக்கும் கவிஞர் வைரமுத்து தனது கவிதை வாயிலாக எதிர்ப்பு தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X