நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை.. சூர்யாவை பாராட்டி.. மீரா மிதுனை டேமேஜ் செய்த வைரமுத்து!

சென்னை: மீரா மிதுன் விவகாரத்தில் சூர்யாவின் அணுகுமுறையை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

மாடலான நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களாக நடிகர்கள் சூர்யா மற்றும் விஜயை சீண்டும் வகையில் டிவிட்டரில் கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கண்டமேனிக்கு விளாசி வருகிறார்கள். ஆபாச வார்த்தைகளால் மீரா மிதுனை அர்ச்சனை செய்யும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வரை உருவாக்கி வருகின்றனர்.

பாரதிராஜா கண்டனம்

பாரதிராஜா கண்டனம்

அவர்களுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக அறிக்கை விட்ட இயக்குநர் பாரதிராஜா, மீரா மிதுனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் நடிகர்களும் தங்களின் ரசிகர்களை மட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

சூர்யா கோரிக்கை

சூர்யா கோரிக்கை

ரசிகர்கள் மிகவும் ஆபாசமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள், படிக்கவே கூசும் அளவுக்கு உள்ளது, ஒரு அறிக்கை விட்டாவது ரசிகர்களை நடிகர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த நடிகர் சூர்யா, தரம் தராழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கும் சாடல்

அதற்கும் சாடல்

மேலும் எனது தம்பி தங்கைகளின் சக்தி ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படட்டும் என்றும் தங்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு நன்றி என்றும் கூறியிருந்தார். அதனையும் விமர்சித்திருந்தார் மீரா மிதுன். நீங்களும் இப்படிதான் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் உங்கள் ரசிகர்களே உங்கள் பேச்சை கேட்பதில்லை என்று சாடியிருந்தார்.

கரை கைகலப்பதில்லை

கரை கைகலப்பதில்லை

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் அணுகுமுறையை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். அதேநேரத்தில் மீரா மிதுனை நதியோடு போகும் வெறும் நுரை என்றும் டேமேஜ் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
சுமத்தப்பட்ட பழியின்மீது
சூர்யாவின் அணுகுமுறை நன்று.
பக்குவப்பட்டவர்கள்
பதற்றமுறுவதில்லை;
பாராட்டுகிறேன்.
நதியோடு போகும் நுரையோடு
கரை கைகலப்பதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

ஒரு ஆண்டுக்கு ஊரடங்கு | Vairamuthu Latest கவிதை | கவிப்பேரரசு வைரமுத்து
வைரமுத்துவுடனும் வம்பு

வைரமுத்துவுடனும் வம்பு

கவிஞர் வைரமுத்துவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் லைக்ஸ் செய்து வருகின்றனர். மேலும் அவரது பதிவை ரீடிவிட்டும் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பதிவை பார்த்த மீரா மிதுன் கவிஞர் வைரமுத்துவையும் வம்பிழுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X