twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் ஒரே மேடையில் புகழ்ந்த வைரமுத்து.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

    |

    சென்னை: மறைந்த இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரின் கேபி 90 நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிப்பேரரசு வைரமுத்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

    கவி பேரரசு வைரமுத்து கடந்த சில மாதங்களாய் அவ்வப்போது தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உதவியாளர் மோகன் கேபி 90 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கே.பாலச்சந்தருடன் பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து பல்வேறு சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

    யாஷிகாவோட 'அந்த' வீடியோ மட்டுமல்ல.. 'இந்த' வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க! யாஷிகாவோட 'அந்த' வீடியோ மட்டுமல்ல.. 'இந்த' வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க!

    பெயரை குறிப்பிடாமல்

    பெயரை குறிப்பிடாமல்

    ஒரு இசை அமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணி புரிந்ததாக கூறிய வைரமுத்து ஒரு நிலையில் அந்த இசை அமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக இளையராஜாவின் பெயரை குறிப்பிடாமல் கூறினார்.

    திறமையும் ஆளுமையும்

    திறமையும் ஆளுமையும்

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் என்று கூறிய வைரமுத்து அதற்கு காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது என்று இளையராஜாவின் பெயரை குறிப்பிடாமல் புகழ்ந்தார்.

    37 பேர் சோபிக்கவில்லை

    37 பேர் சோபிக்கவில்லை

    மேலும் ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி 37 இசை அமைப்பாளர்களுடன் தான் பணியாற்றியதாக கூறிய வைரமுத்து அந்த 37 பேருமே சோபிக்கவில்லை என்றார்.

    திலீப்தான் இன்றைய ஏஆர் ரஹ்மான்

    திலீப்தான் இன்றைய ஏஆர் ரஹ்மான்

    அந்த நேரத்தில்தான் இயக்குநர் பாலச்சந்தர் திலீப் என்ற புது இசை அமைப்பாளரை தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும், பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு திலீப்பின் இசையில் தான் பாடல் எழுதியதாகவும் கூறினார். அந்த திலீப்தான் இன்றைய ஏஆர் ரஹ்மான் என்றும் கூறினார் வைரமுத்து.

    மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்

    மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்

    திரையுலகில் தன்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா, மீட்டெடுத்தவர் பாலச்சந்தர் என்று கூறிய வைரமுத்து பாலச்சந்தர் ஒரு தொழில்நுட்ப மேதை என்றும பாலச்சந்தரின் சாதனைகளை அரசு ஆவணப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    Poet Vairamuthu praises AR Rahman and Ilayaraja for their Achievement in K.Balachander function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X