ஒன்றா? இரண்டா? என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில்.. பாடும் நிலா பாலு.. எஸ்பிபிக்காக உருகும் வைரமுத்து!
சென்னை: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்காக கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் உருகியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் 16க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளார். இளையராஜா, ஏஆர் ரஹ்மான் என பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா தொற்று உறுதியானதுமே வீடியோ வெளியிட்டார் எஸ்பிபி.

நலமாக உள்ளேன்
அதில் மைல்ட் கொரோனாவாக உள்ளது என்றும் மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள கூறினர். ஆனால் குடும்பத்தினரின் நலன் கருதி மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக கூறினார். வெரி வெரி மைல்டு கொரோனாதான் என்றும் தான் நலமாக இருப்பதாகவும் கூறினார்.

தனக்கே உரிய பாணியில்
அதோடு தன்னை நலம் விசாரிக்க யாரும் போனில் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கவிஞரும் பாடலசிரியருமான வைரமுத்து எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்காக டிவிட்டரில் தனக்கே உரிய பாணியில் கவிதை மொழியில் உருகியுள்ளார்.

காத்திருக்கிறேன்
இது தொடர்பாக வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
ஒன்றா? இரண்டா?
என் தமிழை
அதிகம் கூவிய ஆண்குயில்
பாடும் நிலா பாலு.
விரைவில் அவர் மீளவும்
காற்றை அவர் குரல் ஆளவும்
காத்திருக்கிறேன் -
பால்மழைக்குக் காத்திருக்கும்
பூமியைப் போல்...
பண்டிகைக்குக் காத்திருக்கும்
சாமியைப் போல்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கொரோனாவுக்கு எதிராக
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளில் எஸ்பிபி ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அவர்களின் காம்பினேஷனில் வெளியான பாடல்கள் பெரும் ஹிட்டாகி பல விருதுகளையும் குவித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி மெட்டில் வைரமுத்து வரிகளில் எஸ்பிபி குரலில் கொரோனாவுக்கு எதிரான பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











