என் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் எது எளிதெனில்.. பிறந்த நாளில் வைரமுத்துவின் உருக்கமான கவிதை!
சென்னை: கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாளை முன்னிட்டு உருக்கமான கவிதை ஒன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் ரசிகர்களும் கவிஞர் வைரமுத்துவுக்கு அவரது வரிகள் மூலமாகவே வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
என் ஐம்பதாண்டு
இலக்கிய வாழ்க்கையில்
எது எளிதெனில்... எழுதுவது.
எது கடிதெனில்...
வஞ்சகம் - சூழ்ச்சி
பொறாமை - பொய்ப்பழி
இவற்றைக் கடப்பது.
கடந்தால் வாழ்வு செழுமையுறும்;
மன்னிக்கும் போதுதான் முழுமையுறும்.
முழுமையை நோக்கி...
இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications