தனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க.. சுய ஊரடங்குக்கு வைரமுத்து ஆதரவு!

சென்னை: கவிஞர் வைரமுத்து கவிதை வாயிலாக பிரதமரின் சுய ஊரடங்கு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Recommended Video

Celebrities Quarantine | Shanthanu | KiKi | Dhruv Vikram

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலக நாடுகள் பலவும் முடங்கியிருக்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

Poet Vairamuthu supports for Janata curfew

உலகளவில் கொரோனா வைரஸ்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இந்தியாவிலும் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது கொரோனா வைரஸ்.

இந்தியாவில் இதுவரை, 270க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் கொரோனா வைரஸ்க்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி, ஜனதா கர்ஃபியூ எனும் சுய ஊரடங்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதற்காக நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரமால் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் மோடியின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் ஜனதா கர்ஃப்யூக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். தனது நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் இந்த சுய ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
நம்மைக் காத்தல்;
நாடு காத்தல்.
இரு அறைகூவல் எதிரே.
தனிமைப்படுவோம்
நம்மைக் காக்க;
பின்
ஒன்று படுவோம்
நாடு காக்க... என பதிவிட்டிருக்கிறார்.

மேலும் #CoronaStopKaroNa #coronavirusindia
#IndiaFightsCorona ஆகிய ஹேஷ்டேக்குகளையும் கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X