மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்.. போனில் தொடர்பு கொண்டு வாழ்த்திய வைரமுத்து!

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்தை கவிஞர் வைரமுத்து போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

Poet Vairamuthu wishes Rajinikanth for going medical check up

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.

சுமார் இரண்டு மாதங்கள் ஓய்வுக்கு பின்னர் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்கிறார்.

நாளை மறுநாள் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்தை போனில் தொடர்பு கொண்ட கவிஞர் வைரமுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Poet Vairamuthu wishes Rajinikanth for going medical check up

இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

மருத்துவச் சோதனைக்கு
அமெரிக்கா செல்லும் ரஜினி
நலம் பெற்று இளமையுற்று
நாடு திரும்ப வேண்டுமென்று
தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்.

'மனம் விட்டு
உரையாடவும் உறவாடவும்
நாம் சிலர்தானே
இருக்கிறோம்' என்பது
ரஜினி என்னிடம்
அடிக்கடி சொல்வது.

அந்தச் சிலருள் ஒருவர்
சிறப்போடு வாழ்க.. இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X