போக்கிரி ராஜா: ஜீவாவின் காமெடி + சிபியின் வில்லத்தனம் இரண்டும் சூப்பர்... பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் போக்கிரி ராஜா.
இமான் இசையமைப்பில் வெளியாகியிருக்கும் போக்கிரி ராஜா சுமார் 275 திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறார்.
ரஜினியின் ஹிட் டைட்டில் நடிகர் ஜீவாவைக் காப்பாற்றுமா? ரசிகர்களின் வரவேற்பு படத்திற்கு எப்படியிருக்கிறது? என்பதை இங்கே பார்க்கலாம்.
தளபதிக்கு நன்றி
புலி படத்தால் போக்கிரி ராஜாவுக்கு தடை விழுந்தது என செய்திகள் வெளியாகிய நிலையில், டைட்டில் கார்டில் இளைய தளபதிக்கு நன்றி என்று ஆரம்பித்து இருக்கின்றனர்.
வேலை போயிடுச்சே
முதல் காட்சியிலேயே ஜீவாவுக்கு வேலை போய்விட்டது என்று வருத்தப்படுகிறார் சரவணன்.
ஜீவா, ஹன்சிகா
ஜீவா, ஹன்சிகா கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார் பிரியங்கா.
சிபியின் ஆரம்பம்
சிபிராஜின் நடிப்பு நன்றாக இருக்கிறது. இதற்கு மேல் அவர் வில்லனாக தொடரலாம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் ஜாக்கி.
பொழுதுபோக்கு
முதல் பாதி பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் யாசர் ஷேத்.
மொத்தத்தில் ஜீவாவின் 25 வது படமாக வெளியாகியிருக்கும் போக்கிரி ராஜா, ரசிகர்களிடம் தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











