»   »  விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு 'போக்கிரி சைமன்' நாளை ரிலீஸ்!

விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு 'போக்கிரி சைமன்' நாளை ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பெரிய ரசிகர் படையை வைத்திருப்பவர் விஜய். தமிழ் நடிகர்களில் விஜய்க்குதான் கேரளாவில் மார்க்கெட் அதிகம்.

அவரது படம் வெளியானால், தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் திருவிழா போல அவரது ரசிகர்கள் கொண்டாடுவர்.

கேரளாவில், 'போக்கிரி சைமன்' என்று ஒரு படம் உருவாகியிருக்கிறது. விஜய்யின் மூன்று ரசிகர்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் எல்லாம் சும்மா :

தமிழ் எல்லாம் சும்மா :

தமிழ்ப்படங்களில் கூட விஜய்க்கு இவ்வளவு பில்டப் கொடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு விஜய்யின் புகழ்பாடும் விதமாக ஜிஜோ ஆன்டனி இயக்கத்தில் உருவாகியுள்ளது 'போக்கிரி சைமன்'.

ஃபேன்ஸ் தான் கதை :

ஃபேன்ஸ் தான் கதை :

கேரளாவில் விஜய்க்கு என ரசிகர்கள் அதிகம் இருப்பதால், அதைப் பின்னணியாக கொண்டு அவரது தீவிர ரசிகர்கள் மூன்றுபேரை மையப்படுத்தி 'போக்கிரி சைமன்' படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

துல்கரின் நண்பர் :

துல்கரின் நண்பர் :

இதில் விஜய் ரசிகராக 'போக்கிரி சைமன்' என்கிற கேரக்டரில் துல்கரின் நண்பரான சன்னி வெய்ன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரயாக மார்ட்டின் நடித்துள்ளார்.

விஜய் பாடல் :

விஜய் பாடல் :

விஜய் புகழ்பாடும் விதமாக, அவரது முந்தைய படங்களின் பெயர்களை எல்லாம் பாட்டில் இடம்பெறச்செய்து, கிட்டத்தட்ட ஒரு முழு தமிழ்ப்பாடலாகவே இதை உருவாக்கியுள்ளனர். இதை தமிழ்நாட்டு ரசிகர்கள் கேட்டால் 'நம்மளை மிஞ்சிடுவாய்ங்க போல' என நினைப்பார்கள்.

ரிலீஸ்

ரிலீஸ்

இந்தப் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணன் சேதுகுமார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை அண்மையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

English summary
The film 'Pokkiri Simon' has been focused on Vijay's three Kerala fans. 'Pokkiri Simon' has been directed by Jijo Antony lead by sunny wayne.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil