ஆபாசம்.. சர்ச்சை.. காட்மேன் வெப்சீரிஸ் விவகாரம்.. இயக்குநர், தயாரிப்பாளருக்கு போலீஸ் எச்சரிக்கை!

சென்னை: காட்மேன் வெப்சீரிஸ் சர்ச்சை விவகாரத்தில் அதன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

God Man Webseries வெளியாகுமா? தொடரும் சர்ச்சை Daniel Balaji, Gayathri Raghuram

டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இந்தத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

ஜீ5 நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் வசனங்களும் ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

 டீசர் நீக்கம்

டீசர் நீக்கம்

இதனால் அந்த வெப் சீரிஸ்க்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த வெப்சீரிஸின் டீசர் யூட்யூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த வெப்சீரிஸ் தொடரை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் குறிப்பிட்ட சமூகத்தினரும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

 போலீசார் சம்மன்

போலீசார் சம்மன்

இதனை தொடர்ந்து காட்மேன் வெப்சீரிஸின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் இளங்கோவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் 3ஆம் தேதியான நேற்று காலை 10 மணிக்கு இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

 இரண்டாவது சம்மன்

இரண்டாவது சம்மன்

மூன்றாம் தேதியான நேற்று வெப்சீரிஸின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் ஆஜராகவில்லை . இதனால் போலீசார் நாளை மறுநாள் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு அவர்கள் இருவரும் ஆஜராக வேண்டும் என்று இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர்.

 போலீஸ் எச்சரிக்கை

போலீஸ் எச்சரிக்கை

6 ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே ஜூன் 12ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்த காட்மேன் வெப் சீரிஸ் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜீ5 நிறுவனம் அறிவித்தது.

 கேள்விக்குறி..

கேள்விக்குறி..

ஆனால் டீசரையும் ட்ரெயிலரையும் பார்த்து விட்டு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என வெப்சீரிஸின் தயாரிப்பு குழு அறிக்கை வெளியிட்டது. மேலும் காட்மேன் வெப்சீரிஸ் முற்றிலுமாக தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக் குறியாகிவிடும் என தயாரிப்புக் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X