ஆபாச வெப் சீரிஸில் நடித்தே ஆக வேண்டும்.. இளைஞரை மிரட்டிய பெண் இயக்குநர்.. நடந்தது என்ன?

திருவனந்தபுரம்: ஆபாச வெப் சீரிஸில் நடிக்க சொல்லி இளைஞரை மிரட்டிய பெண் இயக்குநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சினிமா என்பது பலருக்கும் பெரும் கனவு. அந்தக் கனவு மெய்ப்பட நேரம் காலம் பார்க்காமல் பலர் உழைக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமாவின் கதவு அவ்வளவு எளிதாக திறந்துவிடுவதில்லை. ஒருகாலத்தில் சினிமாவில் இயக்குநர் ஆவது அவ்வளவு கடினமாக இருந்தது. அதன் பிறகு அதனை குறும்படங்கள் சற்று எளிதாக்கின.

ஓடிடிகளின் வரவு

ஓடிடிகளின் வரவு

குறும்படங்கள் இயக்கி அதன் மூலம் கவனம் ஈர்த்து பெரிய படங்களை இயக்குவது கடந்த 10 வருடங்களில் அதிகமானது. தற்போது ஓடிடி வரவுகளின் அதிகரிப்பு ஒருவரின் இயக்குநராகும் கனவை மேலும் எளிமைப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. இதன் மூலம் திறமை இருக்கும் யாரும் படத்தையோ, வெப் சீரிஸையோ இயக்கி ஓடிடியிடம் கொடுத்துவிட்டால் போதும். ஆனால் இதனையும் சிலர் தவறாக பயன்படுத்தும் நடவடிக்கை ஆங்காங்கே நடைபெற்றுதான் வருகிறது.

ஆபாச படம் இயக்கிய பெண் இயக்குநர்

ஆபாச படம் இயக்கிய பெண் இயக்குநர்

அந்தவகையில் கேரளாவில் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி தீப்தா (37). இவர் இயக்கிய சில வெப் சீரிஸ்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கின்றனர். ஆனால் அவை அனைத்தும் 18 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கக்கூடிய வெப் சீரிஸ்கள் ஆகும்.

இளைஞர் அளித்த பரபரப்பு புகார்

இளைஞர் அளித்த பரபரப்பு புகார்

இந்நிலையில் சினிமாவில் நடிக்க ஆர்வமுடைய 26 வயது இளைஞர் ஒருவர் லட்சுமி மீது பரபரப்பு புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், நடிப்பதற்கான விளம்பரத்தை பார்த்து நான் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கோரி லட்சுமி தீப்தாவை அணுகினேன். அவர் என்னிடம், உன்னை ஹீரோவாக நடிக்க வைக்கிறேன் என்று கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொன்னார். நானும் நம்பி கையெழுத்து போட்டேன்.

ஆபாச வெப்சீரிஸில் நடிக்க வற்புறுத்திய இயக்குநர்

ஆபாச வெப்சீரிஸில் நடிக்க வற்புறுத்திய இயக்குநர்

அருவிக்காரா பகுதியில் தொடர்ந்து ஷூட்டிங் நடந்தது. அப்போது ஆபாச காட்சியில் நடிக்க சொல்லி லட்சுமி என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் நடிக்க மறுத்தேன். இதனையடுத்து நீ ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறாய். அப்படி நடிக்கவில்லை என்றால் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். இதனையடுத்து வேறு வழியின்றி நான் நடித்தேன். அந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும். அது ஒளிபரப்பானால் என் குடும்ப வாழ்க்கை கடுமையாக பாதிக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் லட்சுமி தீப்தாவை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்க்கிறது. இந்தச் சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X