அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
நடிகர் அஜீத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் இன்று கைது செய்தனர்.
சில தினங்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் சேவை எண்ணான 108-க்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்றும் கூறி போனை துண்டித்தார்.
உடனே அடையாறு போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அஜீத் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

இதுபற்றி திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்தும் விசார்த்து வந்தனர்.
இந்நிலையில், அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரை போலீசார் தற்போது கைது செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அவர் யார்? எதற்காக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்? என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











