சமந்தாவை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

By Vignesh Selvaraj

Recommended Video

சமந்தா ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.

கிருஷ்ணகிரி : சமந்தாவிற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர் நேற்று கிருஷ்ணகிரியில் ஒரு புதிய நகைக்கடை திறப்பு விழாவிற்காக வந்திருந்தார்.

சமந்தாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

அதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, நகைக்கடையைத் திறந்து வைத்தார் சமந்தா.

சமந்தா

சமந்தா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது, சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ரங்கஸ்தலம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

நகைக்கடை திறப்பு

நகைக்கடை திறப்பு

இந்நிலையில் நடிகை சமந்தா, நேற்று கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில், வெங்கடேஸ்வரா நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். காலை 10 மணிக்கு வருகைதரவிருந்த சமந்தாவை காண 8 மணிக்கே ரசிகர்கள் கூட்டம் கூடியது.

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்பு

இதனால் நகைக்கடை அருகில் உள்ள அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற TNPSC 'குரூப்-4' தேர்வில் கலந்துகொள்ள வந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கட்டுப்படுத்த போலீசார் சாலையின் இரு புறமும் கயிறு கட்டி போக்குவரத்தை சரிப்படுத்தினர்.

ரசிகர்கள் மீது தடியடி

ரசிகர்கள் மீது தடியடி

10 மணிக்கு காரில் வந்த நடிகை சமந்தாவை, போலீஸ் பாதுகாப்பை மீறி, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், அவரால் காரை விட்டு இறங்க முடியவில்லை. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். சாலையின் நாலாபுறமும் இளைஞர்கள் சிதறி ஓடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகைக் கடை திறப்பு விழா நடந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X