ஹீரோ வீட்டு பார்ட்டியில் குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்
Recommended Video

ஹைதராபாத்: நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இயக்குனர் ரவீந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது 35வது பிறந்தநாளை கடந்த 20ம் தேதி கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.
அவரை வைத்து ஜெய் லவ குசா படத்தை இயக்கிய ரவீந்திரா பார்ட்டியில் கலந்து கொண்டார்.

கார் விபத்து
பார்ட்டியில் மது அருந்திய ரவீந்திரா தனது காரில் வீட்டிற்கு கிளம்பினார். ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கபே அப்பாட் அருகே இரவு 11 மணிக்கு சென்றபோது மற்றொரு கார் மீது தனது காரை மோதியுள்ளார்.

ரவீந்திரா
வேறொரு கார் மீது மோதிய ரவீந்திரா தனது காரை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர் ஹர்மிந்தர் சிங் போலீசில் புகார் அளித்தார்.

வால்வோ கார்
சிவப்பு நிற வால்வோ காரை இயக்குனர் ரவீந்திரா தான் ஓட்டி வந்தார். பெரிய பிரபலமாக இருந்து கொண்டு தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்காமல் ஓடிவிட்டார் என்று ஹர்மிந்தர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கு
சம்பவம் நடந்தபோது ஹர்மிந்தரின் காரில் அவரின் பெற்றோர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் ரவீந்திரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரவீந்திரா தலைமறைவாகிவிட்டதால் அவரை போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











