சிவகார்த்திகேயனின் மெரினா படத்தில் நடித்த இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: சிவகார்த்திகேயனின் மெரினா படத்தில் நடித்த நடிகர் தென்னரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் ஓவியா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மெரினா. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் தென்னரசு ஒரு குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

குடும்பத்தகராறு

குடும்பத்தகராறு

தமிழில் மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். தென்னரசு தனது குடும்பத்தினருடன் சென்னை மைலாப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று குடும்பத் தகராறு காரணமாக நடிகர் தென்னரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டு வயதில் குழந்தை

இரண்டு வயதில் குழந்தை

தென்னரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது காதலியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் தென்னரசு மதுவுக்கு அடிமையாகியுள்ளார். அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார் தென்னரசு.

தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையி இன்றும் குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் தென்னரசு. பின்னர் அதே வேகத்தில் அறைக்குள் சென்ற தென்னரசு சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வசிப்பவர்கள்

வசிப்பவர்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தென்னரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குடும்பத்தினரிடமும் தென்னரசு வீட்டின் அருகே வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

30 வயதே ஆன நடிகர் தென்னரசு குடும்பத்தகாராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நடிகர் தென்னரசு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X