கோட் பட நடிகை மீது அடிதடி கேஸ்.. என்ன இருந்தாலும் மேல கைவெப்பாங்காளா? - நெட்டிசன்கள் கேள்வி!

சென்னை: மலையாளத்திலும் தமிழிலும் கவனிக்கும் நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் கமல் ஹாசனின் உத்தம வில்லன், செல்வராகவன் எழுதிய மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, அஜித்குமாரின் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். அண்மையில் வெளியான தளபதி விஜய்யின் 'தி கோட்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மீது தற்போது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை பார்வதி நாயர் கடந்த 2022ஆம் ஆண்டு தனது வீட்டில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனதாகவும் அதற்கு காரணம் வீட்டில் பராமரிப்பாளராக பணிபுரிந்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் பரபரப்பைக் கூட்டியது.

parvati nair goat

இதனைத் தொடர்ந்து தன்னை, பார்வதி நாயர் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேர் கண்மூடித் தனமாக தாக்கியதாக பார்வதி நாயர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்த சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நடிகை பார்வதி நாயர் ஒருவர் மீது புகார் அளித்ததே அதிர்ச்சியைக் கிளப்பிய நிலையில், பார்வதி நாயரால் தாக்கப்பட்டேன் என புகார் அளித்திருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியது. தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டும் இல்லாலமல், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். நடிகை பார்வதி நாயர் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் கருத்து: இந்த விவகாரம் தொடர்பாக தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் வேலை பார்த்தவர் மீது சந்தேகத்தின் பேரில்தான் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகள் போன்ற ஆதாரங்கள் இருந்தால் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். அதைவிடுத்து, தனது வீட்டில் பணியாளராக இருந்தவரை தாக்குவது சரியா என கேள்வி எழுப்புகின்றனர்.

parvati nair goat

பார்வதி நாயர்: படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பார்வதி நாயர் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

parvati nair goat

வசூல் விபரம்: படம் இன்னும் ஒரு வாரத்திற்கு எப்படியும் ஓடும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் படம் ஓடும், ஆனால் மல்டி ஸ்கிரீன் தியேட்டரில் படத்தின் காட்சிகளும் திரைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இப்படியான நிலையில் படம் முதல் 16 நாளில் ரூபாய் 425 கோடிகள் முதல் 430 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X