twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வந்தியத்தேவன் பெண்கள் பின்னால் திரியும் காதலனா? மணிரத்னம் மீது போலீசில் புகார்!

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரை தவறாக மணிரத்னம் சித்தரித்துவிட்டார் என்று கூறி வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    பல ஆண்டுகால முயற்சிக்கு பின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு உயிர்கொடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். நேற்று முன்தினம் வெளியான படத்தை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.

    இரண்டே நாளில் ரூ150 கோடி..தட்டித்தூக்கிய பொன்னியின் செல்வன்!இரண்டே நாளில் ரூ150 கோடி..தட்டித்தூக்கிய பொன்னியின் செல்வன்!

    வரலாற்று சரித்திரப்படம்

    வரலாற்று சரித்திரப்படம்

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ள வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து பார்த்து ரசித்து வருகின்றனர். படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வருவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பலரும் படத்தை பார்க்கும் ஆர்வத்தில் மூழ்கி உள்ளனர்.

    150 கோடியை தாண்டியது

    150 கோடியை தாண்டியது

    இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பொன்னி நதி, அலை, சோழா சோழா என அனைத்துப்பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறிவிட்டது. பாடல் வெளியான இரண்டே நாளில் உலகம் முழுவதும் 150 கோடியை தாண்டி உள்ளது.

    வந்தியத்தேவன்

    வந்தியத்தேவன்

    திரையில், மாஸ் காட்டிவரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு திருஷ்டி பட்டது போல, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்துவிட்டதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகால சோழனாக வரும் விக்ரமின் நண்பனாகவும், தளபதியாகவும், வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

    மணிரத்னம் மீது புகார்

    மணிரத்னம் மீது புகார்

    வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை தவறாக காட்டிவிட்டதாக கூறி, இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்றை பொய்மைப்படுத்தியும், திரித்தும் கூறி படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக சில காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள் பின்னால் திரியும் காதலனா?

    பெண்கள் பின்னால் திரியும் காதலனா?

    வந்தியத்தேவன் பெண்கள் பின்னால் திரியும் காதலன் போல் பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் தவறான எண்ணத்தை மணிரத்னம் ஏற்படுத்தி உள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருக்கும் சோழபேரரசின் உண்மையான வரலாற்றை மறைத்துவிட்டார் என்றும் அந்த புகார் மனுவில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    A lawyer has filed a complaint against Mani Ratnam at the police station claiming that he has misrepresented Vandhiyathevan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X