நடிகர்கள் விஜய், சூர்யா குறித்து ஆபாச பேச்சு.. மீரா மிதுன் மீது போலீஸில் புகார்.. கொடும்பாவி எரிப்பு
சென்னை: நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் மீரா மிதுன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களாக நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்து நடிகை மீரா மிதுன் அவதூறாக பேசி வருகிறார்.
அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரையும் ஆபாச வார்த்தையால் பேசி வரும் மீரா மிதுன், அவர்கள் குடும்பத்தை கோலிவுட் மாஃபியாக்கள் என்கிறார்.

கண்ணீர் அஞ்சலி
இதனால் கடுப்பான விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் பதிலுக்கு மீரா மிதுனை விளாசி வருகின்றனர். அவரை ஆபாச வார்த்தையால் திட்டி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் அளவுக்கு சென்றுவிட்டனர். மேலும் பல ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு மீரா மிதுனை கிழித்து தொங்கவிட்டனர்.

ரசிகர்கள் எச்சரிக்கை
ஆனாலும் அடங்காத நடிகை மீரா மிதுன், நடிகர் விஜயின் சிறு வயது போட்டோவை ஷேர் செய்து கிண்டலடித்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜயின் ரசிகர்கள் நீங்கள் தமிழ்நாட்டிற்கோ அல்லது தென் மாவட்டங்களுக்கோ வந்து பாருங்கள் என எச்சரித்தனர்.

புதுச்சேரியில் புகார்
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி, கோவை பல ஊர்களின் பெயரை குறிப்பிட்டு இங்குதான் இருக்கிறேன் வாருங்கள் என வம்பிழுத்து வருகிறார் மீரா மிதுன். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது கலாம் சேவை அமைப்பினர் நேற்று புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொடும்பாவி எரிப்பு
ஆனால் அதனையும் தாறுமாறாக கிண்டலடித்தார் நடிகை மீரா மிதுன். இதனை தொடர்ந்து மீரா மிதுனின் கொடும்பாவியை எரித்து கலாம் சேவை அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் கேலி செய்துள்ளார் மீரா மிதுன்.


Click it and Unblock the Notifications